Monday , 18 February 2019
Home » சினிமா (page 7)

சினிமா

தள்ளிப்போகும் ரீலீஸ் தேதி ; எப்படியும் ‘சென்னையில் ஒருநாள்’ …வெளியாகும்

Chennaiyil-Oru-Naal-2-Trailer-TM-2-e1498281288757

தியேட்டர்கள் கிடைக்காததால் இந்த வாரம் ரீலீஸ்க்குத் தயாராக இருந்த சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் படத்தின் ரீலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சென்னையில் ஒரு நாள். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.இந்நிலையில், சென்ற வாரம் வெளியான விஷாலின் துப்பறிவாளன் மற்றும் இந்த வாரம் வெளியாக உள்ள ஜோதிகாவின் மகளிர் மட்டும் ஆகிய படங்களால் இப்படத்திற்கு தியேட்டர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர் படக்குழுவினர். Read More »

கல்வித் திட்ட உருவாக்கத்தை மாநில அரசு கைவிட்டது ஏன் ? கமல் ஹாசன்…

1487419281-1486547269-kamal_haasan

கல்வியையும் கல்வி திட்டங்களையும்  உருவாக்கும் பொறுப்பு மாநிலங்கள் கையில் தான் இருக்க வேண்டும்’  என நடிகர் கமலஹாசன்  நீட் தேர்வு குறித்தான தனது மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக அரசின் நிர்வாகம், ஊழல், நீட் தேர்வு உட்பட பலப் பிரச்னைகள் குறித்து, ட்விட்டரில் தன் ஆதங்கத்தையும், கோபத்தையும் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நீட் தேர்வு குறித்து பேசினார். அதில் நீட் தேர்வு பிரச்சனையில் நம் பிள்ளைகளைத் தெருவில் நிறுத்தி, போராட விட்டு விட்டோம் ... Read More »

மந்திரமில்லை தந்திரம் ; ‘மெர்சல்’ படத்துக்காக மேஜிக் கற்றுவருகிறார் விஜய்…

mersal

அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ள விஜய் அந்தப் படத்திற்காக மூவரிடம் மேஜிக் கற்றுக்கொண்டு நடித்துள்ளார். மெர்சல் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜய் மேஜிக் நிபுணராகவும் வருகிறார். கொஞ்சம் மேஜிக் பற்றிய விஷயங்களை அறிந்து கொண்டால் தான் இந்த பாத்திரத்தில் தத்ரூபமாக நடிக்க முடியும் என்பதற்காக அவருக்கு மேஜிக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த மேஜிக் நிபுணர்கள் விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து மேஜிக் நிபுணரான கோகோ ரெக்யூம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜோசப் விஜய் இந்தியாவில் ... Read More »

சீனாவில் 1000 கோடி ரூபாய் வசூலித்து ‘தங்கல்’ படம் சாதனை !!

Dangal-new-1280

அமீர்கான் நடிப்பில் உருவான ‘தங்கல்’ திரைப்படம் ஹாங்காங்கில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது. விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான தங்கல் திரைப்படம் பல்வேறு நாடுகளில் சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கில் கடந்த 24 ஆம் தேதி வெளியான இந்தப்படம் அங்கு பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் அங்கு 4.48 கோடி ரூபாய் வசூல் செய்து, அதிக வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. ... Read More »

’2.ஓ’ படத்தின் மேக்கிங் டீசருக்கு அமோக வரவேற்பு …

27869

’2.ஓ’ படத்தின் மேக்கிங் டீசருக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 15 மணி நேரத்தில் இரண்டரை மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘2.ஓ’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஜனவரி மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் மேக்கிங் டீசரை இயக்குனர் ஷங்கர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ... Read More »

தெலுங்கு கற்றுக்கொள்ள தீவிரம் காட்டும் விஜய் சேதுபதி…

Vijay-Sethupathi-in-Rekka-movie-(11)2197

சுதந்திரப்போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் சைரா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இந்தப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார். நயன்தாரா நாயகியாக நடிக்க இருக்கும் இந்தப்படத்தில் அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், ஜெகதி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக ரவிமர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராம்சரண் தயாரிக்க ... Read More »

விவேகமாக வெளியாகிறது வேலைக்காரன் டீசர்…

Thala-Siva-86364

ஆகஸ்ட் 24ம் தேதி அஜித் நடித்த விவேகம் படம் வெளியாகும் திரையரங்குகளில் வேலைக்காரன் டீசர் வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் டீசர் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஜித் நடித்துள்ள விவேகம் படம் ரிலீசாகும் திரையரங்குகளில் 24ம் தேதி முதல் வேலைக்காரன் படத்தின் டீசரும் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அப்படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘அஜித் நடித்த விவேகம் 24ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. அதே ... Read More »

அடுத்தபடம் ஆக்‌ஷன் படம் ; பிரபாஸ் ’சாஹோ’ படப்பிடிப்பில் தீவிரம் …

prabhas-saaho-teaser-show-time

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், தனது அடுத்த படமான ’சாஹோ’ படப்பிடிப்பில் நேற்று கலந்துகொண்டார். பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் பிரபாஸ் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லன். தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி!படத்தை இயக்கும் சுஜீத் கூறும்போது, ’பிரபாஸ் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துவிட்டார். அடுத்த 3 வாரங்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும். இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் இதுவரை இந்திய ... Read More »

திருமணம் முடிந்த கையோடு படப்பிடிப்புக்கு தயாரான நடிகை பிரியாமணி…

1461995400_south-indian-actress-priyamani-seen-her-fiance-mustafa-raj-during-finale-episode-gum-d2-d4

நடிகை பிரியாமணி, தனது நீண்ட நாள் காதலர் முஸ்தபா ராஜை வரும் 23-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘பெங்களூரில் பதிவு திருமணம் செய்கிறோம். இது எளிமையான திருமணம்தான். ஏன் பதிவு திருமணம் என்று கேட்கிறார்கள். நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு குடும்பத்தினரின் மத சென்டிமென்டை கெடுக்க வேண்டாம் என்றுதான் பதிவு திருமணம் செய்கிறோம். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக நடிப்பேன். திருமண வரவேற்பு முடிந்த இரண்டாவது நாளே எனக்கு படப்பிடிப்பு இருக்கிறது’ ... Read More »

‘புரூஸ் லீ’-யின் வாழ்க்கை வரலாறு ஏ.ஆர்.ரஹ்மான் இசையுடன் படமாகிறது…

a-r-rahman-759

‘புரூஸ் லீ’-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். உலகளவில் பிரபலமான நடிகராக அறியப்படும் ஹாலிவுட் நடிகர் ‘புரூஸ் லீ’-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்திருந்த இந்தி இயக்குநர் ஷேகர் கபூர் இயக்குகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு ‘லிட்டில் டிராகன்’ (LITTLE DRAGON) என டைட்டில் சூட்டியுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெகு விரைவில் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com