Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சினிமா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 5
Sunday , 16 January 2022
Home » சினிமா (page 5)

சினிமா

விஷாலிடம் இருந்து எனக்கு மிரட்டல் – ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார்.அதன்படி, தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி. ... Read More »

நடனத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படம் லக்ஷ்மி!!

நடனம் என்பது ஒரு ஆற்றல். நடனம் ஆடுபவர்கள் மட்டுமல்லாமல் நடனத்தை ரசிப்பவர்களுக்கும் ரசிக்கும் ஆற்றலை அளிக்கும் ஒரு கலை இது. பிரபுதேவா நடிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் “லக்ஷ்மி”. நடனத்தில் மூழ்க விரும்பும் அனைவருக்குமான ஒரு படமாக அமைந்துள்ளது. தமிழ் சினிமா நீண்ட காலத்துக்கு பிறகு நடனம் பற்றிய ஒரு திரைப்படத்தை பார்க்க இருக்கிறது. மேலும் “லக்‌ஷ்மி” ஒரு மிகப்பெரிய நடன திருவிழாவாக வரவேற்கப்படும், ஏற்றுக் கொள்ளப்படும், அங்கீகரிக்கப்படும். “லக்ஷ்மி பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படம். நடனம் என்பது ஒரு சிறந்த ... Read More »

ரசிக்கிறவர்களின் படங்களில் நான் வேலை செய்ய விரும்புவேன்

கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”. டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.படத்தை துவங்கும்போது கதை என்னை திருப்திப்படுத்தும் வரை ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ... Read More »

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு!!

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது. விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இந்த படத்திற்கு சர்கார் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த ... Read More »

இசை போதைக்கு அடிமையாவதை தவிர்க்க முடியாது

High on Love’ பாடலில் திளைத்த பிறகு,  அடுத்து காதல் போதையை திகட்ட திகட்ட அனுபவிக்கும் காலம் வந்திருக்கிறது. ஆம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்றவுடனே அவரின் இசை போதைக்கு அடிமையாவதை தவிர்க்க முடியாது. அவரின் மந்திர இசையில் காதல் பாடல்கள் நமது கண்களை கண்ணீரால் நனைக்காமல் இருக்காது. தன்னையறியாமல் கத்த வைக்கும், தரையில் நம் கால்களை நடனமாட வைக்கும். இதை விட ஒரு போதை இருக்க முடியுமா என்ன? ஒட்டுமொத்த நகரமும் யுவன் இசையில் மயங்கி கிடக்க, கூடுதலாக சொர்க்கம் போன்ற ... Read More »

மலையாள நடிகர் சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு!!

கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இன்னசென்ட் இருந்து வருகிறார். இவர் பதவி ஏற்ற பிறகு நடிகர், நடிகைகளின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க நடவடிக்கையும் எடுத்தார். நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் இன்னசென்ட் திறமையாக கையாண்டு நடிகர் சங்கத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இன்னசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து உள்ளார். ஆனாலும் முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் நடிகர் சங்க தலைவர் பதவியில் தொடர்ந்து ... Read More »

விஜய் படத்தின் தலைப்பு வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்து கடந்த ஆண்டு (2017) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது.ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, ... Read More »

ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் என்ன?

ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் என்ன? ஒரு நல்ல கருத்தை கதையாக்குவது, நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வருவது? வேறென்ன? இயற்கையாகவே இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு திறமையான இயக்குனரிடம் இருப்பவை. இவையெல்லாம் தாண்டி மிகவும் முக்கியமான ஒரு விஷயம், படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை  பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது. இயக்குனர் கண்ணன் அந்த மாதிரி ஒரு அரிதான இயக்குனர் தான். தன்னுடைய கேரியரில் அதை தொடர்ந்து நிரூபித்து எடுத்துக்காட்டாக இருப்பவர். அத்தகைய பண்புகள் தான் அவருக்கு, அதர்வா, ... Read More »

கர்நாடகத்தில் ‘காலா’ படத்துக்கு எதிர்ப்பு வினியோகஸ்தர் அலுவலகம் சூறை

கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு ‘காலா’ படத்துக்கு எதிராக கன்னடர்கள் போராட்டம்இ வினியோகஸ்தர் அலுவலகம் சூறை; ரஜினி போஸ்டர்கள் கிழிப்பு ரஜினிகாந்தின் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள காலா வினியோகஸ்தர் அலுவலகத்தை கன்னட அமைப்பினர் சூறையாடினார்கள். ரஜினி போஸ்டர்களையும் கிழித்து எறிந்தனர்.ரஜினியின் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. காலா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் காலா படத்தின் வினியோக ... Read More »

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், வெளியானது காலா திரைப்படம்!

பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. அரசியல் வருகை குறித்து அறிவித்தப் பிறகு வரும் ரஜினியின் படம் என்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகள் தொடங்கின. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும காலா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com