Tuesday , 22 January 2019
Home » சினிமா (page 47)

சினிமா

தூங்காவனம் இன்னொரு குருதிப் புனல்.

thoongavanam-poster1

2011-ல் ஃப்ரெஞ்ச் மொழியில், ஃப்ரெடெரிக் ஜார்டின் இயக்கத்தில் வெளியான `ஸ்லீப்லெஸ் நைட்ஸ்` படத்தின் அப்பட்டமான தமிழ் வடிவமே `தூங்காவனம்`. டைட்டில் கார்டில் இதைப்போடுகிறார்கள் எனினும், அதைப் படிக்க ஒரு நொடி வாய்ப்பு கூட தராமல் சட்டென மறைந்துவிடும்படி ஓட்டப்படுவதால் இத்தகவலை இங்கே பதிவது அவசியமாகிறது. தன் பட இயக்குநர்களை கமல் எப்போதுமே இரண்டு வகையாகத்தேர்ந்தெடுப்பார். முதல் இனம் கமல் சொன்னாலே கேட்காமல் சுயமாக இயக்கும் தேர்ந்த புத்திசாலிகள். இரண்டாம் இனம் கமல் என்ன சொன்னாலும் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைகள். `தூங்காவனம்` இயக்குநர் இதில் ரெண்டாம் ... Read More »

அஜித்போல ரசிகர்களுக்கு அல்வா கொடுக்கத் தொடங்கிய விஜய்

download

வழக்கமாக அஜித் படங்களுக்குதான் படத்தின் தலைப்பை அறிவிக்காமலே படப்பிடிப்பை நடத்துவார்கள். டைட்டில் என்ன என்ன அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நேரம் பார்த்து டைட்டிலை அறிவிப்பார்கள். அந்த நேரம் அது ஒரு சுமாரான டைட்டிலாக இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் விளைவாக அந்த டைட்டில் ஃபேமஸாகிவிடும். இப்படித்தான் அஜித் ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ என தொடர்ந்து செய்துவருகிறார். இப்போது இந்த லிஸ்டில் தற்போது விஜய்யும் இணைந்துவிட்டார். விட்டால் டைட்டிலே வைக்காமல் விஜய் 59 படத்தை ரிலீஸ் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. அந்தளவுக்கு எந்த டைட்டிலை ... Read More »

அனுஷ்கா அழகை வர்ணித்த நடிகரை மிரட்டிய பிரபல ஹீரோ

404_19

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த “சைஸ் ஜீரோ” இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு காமெடி நடிகர் அலி பேசும் போது அனுஷ்கா தொடை அழகை பற்றி கிண்டல் பண்ணி பேசினார். இதனால் பெரிய சர்ச்சை உண்டானது.அதாவது அனுஷ்காவின் தொடைகள் தன்னை கவர்ந்ததாக ஆபாசமாக விமர்சனம் செய்தார். அவரது பேச்சு ஷாக் அளித்ததுடன் பலரை முகம் சுழிக்க வைத்தது. பொது இடத்தில் இப்படி ஆபாசமாக அலி பேசிய பேச்சுக்கு பெண்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் அனுஷ்காவுடன் ‘பாகுபலி’ படத்தில் இணைந்து நடித்துள்ள ராணா அனுஷ்கா பற்றி ஆபாசமாக ... Read More »

கணவர் தயாரிப்பில் நடிக்கிறார் சிம்ரன்..!

11-1394513658-simran-soulmates-02

நடிகை சிம்ரனின் கணவரும், சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சி தயாரிப்பாளருமான தீபக் பாகா, வெள்ளித்திரையில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளார்.இதற்காக ‘சிம்ரன் & சன்ஸ்’ எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ள தீபக் பாகா, தனது முதல்படத்தின் தயாரிப்பு வேலைகளை பரபரப்பாக தொடங்கியுள்ளார்.படத்திற்கான இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் கௌரிசங்கர். இவர் பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரபல நட்சத்திரங்களை கொண்டு எண்ணற்ற விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். கௌரிசங்கர் இயக்க உள்ள பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.தனது புதிய படத்தின் பெயர், நடிகர், நடிகையர் ... Read More »

‘நானும் ரவுடிதான்’ தம்பியை நம்பி வண்டியில ஏத்தலாம்.

51236-vijaysethupathy

சிம்பு, வரலட்சுமி ஜோடி சேர்ந்த `போடா போடி` என்கிற மரண மொக்கைப் படம் கொடுத்த விக்னேஷ் சிவனின் இரண்டாவது படம். நயனுடன் இந்த சிவன் எடுத்த ஒரு செல்ஃபிக்குப் பின்னர் தாராவின் மற்ற எல்லாப்படங்களையும் விட அதிக ஹிட்டடித்தது அந்த செல்ஃபிதான். காரணம் அந்த செல்ஃபியில் ஒரு மிஸ்டிரி கலந்த கெமிஸ்டிரி இருந்தது. `நானும் ரவுடிதான்` பார்த்தபோதுதான் அந்த மிஸ்டரியின் ஹிஸ்டரி புரிந்தது. தொடர்ந்து கன்ஃபியூஸ் ஆகவேண்டாம். எனவே கதைக்குப் போவோம். அம்மி ராதிகா மகன் விஜய் சேதுபதியை போலீஸ் ஆக்க ஆசைப்பட, அவரோ ... Read More »

“பத்து எண்றதுக்குள்ள”– விமர்சனம்

vikram-and-samantha-in-10-endrathukulla-movie-wide-300x188

முதல் படமான `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது` படத்தின் மூலமே தான் எவ்வளவு பெரிய குழப்பவாதி என்பதை ரெண்டே முக்கால் மணி நேரத்தில் தெளிவாக புரிய வைத்தவர் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன். அடுத்த `கோலிசோடா`வும் போலிசோடாதான் என்றாலும், முற்றிலும் புதுமுகங்கள், மிக மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் போன்ற காரணங்களால் அளவுக்கு மீறி மீடியாக்களால் கொண்டாடப்பட்டது. சைக்கிளில் போய்க்கொண்டிருந்தவனுக்கு திடீரென எண்டவர் கார் கிடைத்தால் தலைகால் புரியாமல் டாப் கியரில் பயணிக்கத்தோன்றுமே அப்படிப்பட்ட ஒரு விபரீத பயணமே இந்த `பத்து என்றதுக்குள்ள`. ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com