Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சினிமா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 4
Sunday , 16 January 2022
Home » சினிமா (page 4)

சினிமா

மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் ரஜினிகாந்தின் 2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.542 கோடிக்கு மேல் செலவில் எடுத்துள்ள இந்த படம் நவம்பரில் திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக உற்சாகம் அடைந்துள்ளனர்.ராட்சத பறவைகளும் செல்போன்களும் டிரெய்லரில் முக்கியத்துவம் பெற்று இருப்பதால் செல்போன் டவர்களால் பறவைகளுக்கு நேரும் பாதிப்புகளை படத்தில் பேசி இருக்கலாம் என்று யூகமும் உள்ளது. கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் டிரெய்லர் பிரமிப்பாக உள்ளது என்கின்றனர். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் மிரட்டி ... Read More »

பாகுபலியை மிஞ்சிய ரஜினிகாந்தின் 2.0 கிராபிக்ஸ்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே படம் வெளியாகும் தேதிகளை அறிவித்து தள்ளிவைத்து விட்டனர். கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்றனர். வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர். நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் ... Read More »

நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை

தமிழ் நாட்டில் பிறந்து இந்தி பட உலகில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, இந்தியில் 300 படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை மணந்த இவருக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்று இருந்தபோது அங்குள்ள ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஆவண படமாக தயாராகிறது. சினிமா படமாக எடுக்கவும் முயற்சிகள் ... Read More »

வைரலாகும் சாமி 2 டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு

ஹரி இயக்கத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும்  சாமி 2 படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ... Read More »

சண்டக்கோழி-2 படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2′ படம் உருவாகி வருகிறது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கினார். அதைத் தொடர்ந்து நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர், தனித்தனியாக படக்குழுவினர் 150 பேருக்கு தலா ஒரு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியதுடன், அனைவருக்கும் விருந்தளித்து ... Read More »

விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், முற்றிலும் வேறுபட்டதாக படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ... Read More »

ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாக கூறி, நடிகர் லாரன்ஸ் ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார். தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ... Read More »

அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாட!!

ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இஐஸ்வர்யா ராய் , அபிஷேக் பச்சன், மோதல்ருக்கிறார். ஐஸ்வர்யாராய்க்கும், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் காதல் ஏற்பட்டு 2007–ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. ஐஸ்வர்யாராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல உறவு இல்லை என்று தகவல் பரவியது. அபிஷேக்பச்சன் தாய் ஜெயபாதுரிக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடப்பதாகவும் கூறப்பட்டது. ... Read More »

இந்தியாவின் துணை ஜனாதிபதி கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா தயாரித்து அவரது தம்பி கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் தமிழில் வெற்றி நடை போட்டு வருகிறது. தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படம் சின்ன பாபு என்ற பெயரில் தயாராகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பங்களின் பாசப்போராட்டங்களை எடுத்துரைத்துள்ள இத்திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்து வருவதால் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிவை இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ... Read More »

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்ம துரை, விக்ரம் வேதா ஆகிய படங்கள் அவரது திறைமையை வெளிப்படுத்தின. ஜுங்கா படத்தில் கஞ்சத்தனமான தாதாவாக வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடிக்கிறார். பஹத்பாசில், சமந்தாவும் இதில் உள்ளனர். தியாகராஜன் குமார ராஜா டைரக்டு செய்துள்ளார். படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம் சமூக ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com