Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சினிமா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 30
Sunday , 16 January 2022
Home » சினிமா (page 30)

சினிமா

‘சென்னை டு சிங்கப்பூர்’ ஜிப்ரானின் நுட்பமான இசை வெளியீடு .

ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்குகிறது  இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை டு சிங்கப்பூர்’ இசைப் பயணம்.   பைரவி, இந்தோளம், மோகனம், கீரவாணி  என எல்லா இசை ராகங்களுக்கும் மனிதர்களின் நோய் தீர்க்கும் சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான  இசைக்கு  தன்னுடைய ‘சென்னை டு சிங்கப்பூர்’  பயணத்தின் மூலம் கூடுதல் பெருமை  சேர்க்க  தயாராக இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். “காற்றின் திசை எங்கும் கானம் சென்று தங்கும்” என்பதற்கேற்ப, இவர்  இசையமைத்திருக்கும் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தின்  ஆறு பாடல்களை, ஆறு நாடுகளில் அதுவும் ... Read More »

நடிகர் வெங்கடேஷ்- நயன்தாரா இடையே மோதல்; நயன்தாரா மீது பட அதிபர் சங்கத்தில் புகார்

நடிகர் வெங்கடேஷ்- நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாரா மீது பட அதிபர் சங்கத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். நயன்தாரா, தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கடந்த வருடம் இவர் நடித்த நண்பேன்டா, மாஸ், தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான் மற்றும் மலையாளத்தில் பாஸ்கர் த ராஸ்கல் ஆகிய 6 படங்கள் திரைக்கு வந்தன. இந்த வருடம் இது நம்ம ஆளு, மலையாளத்தில் புதிய நியமம் ஆகிய படங்கள் வெளி ... Read More »

‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படம்

இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதுமையான காட்சிகளோடு உருவாகியுள்ளது  ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படம்  ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ என்னும் வார்த்தையை கேட்டிராதவதர்கள்  தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அதற்கு காரணம் பெற்றோர்கள். இப்படி சிறுவயதிலிருந்தே நம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டு பயணிக்கும் அந்த வார்த்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது தான், இசையமைப்பாளர் – பாடகர் ரெஹானா ‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில்  தயாரித்து வரும்  ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படம் . இந்த படத்தை ரெஹானாவின் நண்பர்களான சுபா மற்றும் வாசுகி ... Read More »

இயக்குனர் இந்த்ரா இயக்கும் ‘டூப்லைட்’ திரைப்படம்….பிரகாசமா எரியுமா?

காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது, அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கும் ‘டூப்லைட்’ திரைப்படம் எல்லா படத்திற்கும் ரசிகர்களை கவரக்கூடிய தலைப்புகள் அமைந்துவிடாது. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அந்த யுக்தியை மிக சரியாக கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கி, ‘ஆஸ்ட்ரிச் மீடியா புரோடக்ஷன்’ தயாரித்து வரும் ‘டூப்லைட்’ திரைப்படம். “என்னுடைய நீண்ட நாள் கனவு தற்போது ‘டூப்லைட்’ திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கிறது. வெகு நாட்களுக்கு முன் நான் எழுதிய ... Read More »

சிவகார்த்திகேயன் வரிசையில் அடுத்து ஈரோடு மகேஷ்

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் ஆரம்ப காலத்தில் சின்னத்திரையில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளார். தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை செல்லும் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் தான் ரோல் மாடல், அந்த வகையில் அடுத்து ஈரோடு மகேஷுன் சினிமாவில் முழுமையாக களம் இறங்கவுள்ளார். இதற்கு முன் ஒரு சில படங்களில் தலையை காட்டினாலும், இனி நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என முடிவு செய்துள்ளாராம். Read More »

கபாலி டிக்கெட் விவகாரம்! தாணுவிற்கு கண்டனம் தெரிவித்த ரஞ்சித்

கபாலி முதல் நாள் டிக்கெட்டுகள் தியேட்டர்களில் அதிக விலை வைத்து விற்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் கார்பரேட் புக்கிங் மூலம் அனைத்து டிக்கெட்களும் அதிக விலைக்கு பெரிய நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுவிட்டதால், சாதாரண ரசிகர்கள் படம் பார்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். “இது நியாயமே இல்லை. நான் காசி தியேட்டரில் படம் பார்க்கும்போது பலர் எல்லோரும் என்னை கேள்வி கேட்டார்கள். எனக்கும் கஷ்டமாகதான் இருந்தது.” “டிக்கெட் விலை அதிகமாக வைத்து விற்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. அதில் ... Read More »

விடைகொடு விடைகொடு உயிரே ……

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றால் ரசிகர்கள் அவ்வளவு சந்தோஷ படுவார்கள். அதேபோல் அவர்கள் பிரியும் போது கஷ்டப்படுவார்கள். அப்படி சமீபகாலமாக வலைதளங்களில் பரவி வரும் செய்தி விஜய்,அமலாபால் விவாகரத்து. இதுகுறித்து விஜய்யின் தந்தை ஏ.எல். அழகப்பன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்துள்ள பேட்டியில், இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். Read More »

கபாலி பேனர்களால் ”ட்ராபிக்”-களமிறங்கினார் ட்ராபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமி, இவர் சென்னையில் அண்மைகாலமாக சில அதிரடியான செயல்களை செய்து வருகிறார். தற்போது இவர் ரஜினியின் கபாலிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த கபாலி பட பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி டிராபிக் ராமசாமி பேனர்களை அகற்ற முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More »

தொடர்த்திடும் அச்சம் தொடர்களின் உச்சம் ……இப்படியே போனா என்னாவது ?

திரைப்படங்களை போல சின்னத்திரை தொடர்களுக்கும் தணிக்கை குழு வைக்க வேண்டும் என்று போராடுபவர்கள் ஒருபக்கம். மறுபக்கம் சீரியல்களில் வன்முறைகளும், கவர்ச்சியும் அதிகரித்து வருகிறது. உதாரணத்துக்கு வலியே தெரியாமல் எப்படி கொலை செய்வது, கர்ப்பிணி பெண்ணை எப்படி கரு கலைக்க வைப்பது, இதுபோக டப்பிங் சீரியல்களில் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை. இது எல்லாவற்றையும் தாண்டி பாலியல் பலாத்கார காட்சிகள் கூட தொடர்களில் வர ஆரம்பித்திருக்கிறது. சீரியல்களில் இப்படியே போனால் மக்கள் நிலை என்ன, இதனை பார்த்தே அனைவருக்கும் தவறு எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள மாட்டார்களா ... Read More »

ஹாலிவுட் லெவல் ”தல 57 வைத்து படம் ”-அமைதியான முறையில் படப்பிடிப்பு

அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் அனைத்தும் மிகவும் அமைதியான முறையில் நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு NuBoyana  என்ற ஸ்டுடியோஸில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த இடத்தில் பல ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com