Thursday , 20 September 2018
Home » சினிமா (page 3)

சினிமா

மலையாள நடிகர் சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு!!

mohanlal

கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இன்னசென்ட் இருந்து வருகிறார். இவர் பதவி ஏற்ற பிறகு நடிகர், நடிகைகளின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க நடவடிக்கையும் எடுத்தார். நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் இன்னசென்ட் திறமையாக கையாண்டு நடிகர் சங்கத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இன்னசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து உள்ளார். ஆனாலும் முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் நடிகர் சங்க தலைவர் பதவியில் தொடர்ந்து ... Read More »

விஜய் படத்தின் தலைப்பு வெளியீடு தேதி அறிவிப்பு

vijay

நடிகர் விஜய் நடித்து கடந்த ஆண்டு (2017) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது.ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, ... Read More »

ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் என்ன?

01

ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் என்ன? ஒரு நல்ல கருத்தை கதையாக்குவது, நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வருவது? வேறென்ன? இயற்கையாகவே இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு திறமையான இயக்குனரிடம் இருப்பவை. இவையெல்லாம் தாண்டி மிகவும் முக்கியமான ஒரு விஷயம், படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை  பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது. இயக்குனர் கண்ணன் அந்த மாதிரி ஒரு அரிதான இயக்குனர் தான். தன்னுடைய கேரியரில் அதை தொடர்ந்து நிரூபித்து எடுத்துக்காட்டாக இருப்பவர். அத்தகைய பண்புகள் தான் அவருக்கு, அதர்வா, ... Read More »

கர்நாடகத்தில் ‘காலா’ படத்துக்கு எதிர்ப்பு வினியோகஸ்தர் அலுவலகம் சூறை

Rajinikanths-Kaala-

கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு ‘காலா’ படத்துக்கு எதிராக கன்னடர்கள் போராட்டம்இ வினியோகஸ்தர் அலுவலகம் சூறை; ரஜினி போஸ்டர்கள் கிழிப்பு ரஜினிகாந்தின் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள காலா வினியோகஸ்தர் அலுவலகத்தை கன்னட அமைப்பினர் சூறையாடினார்கள். ரஜினி போஸ்டர்களையும் கிழித்து எறிந்தனர்.ரஜினியின் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. காலா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் காலா படத்தின் வினியோக ... Read More »

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், வெளியானது காலா திரைப்படம்!

kaala-poster

பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. அரசியல் வருகை குறித்து அறிவித்தப் பிறகு வரும் ரஜினியின் படம் என்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகள் தொடங்கின. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும காலா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி ... Read More »

கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியாகிறது காலா!!

kaala-poster

ரஜினியின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் ... Read More »

காலா படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல்

rajini

ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஜவஹர் என்பவர் காலா படத்தில், தனது மறைந்த தந்தை திரவியத்தின் பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாகவும், உயர் சாதியினரின் ஆதரவை பெறுவதற்காக, தனது தந்தையை மோசமாக சித்தரிப்பதாகவும், இதனால், இந்த நோட்டீஸ் கிடைத்த 36-மணி நேரத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் 101-கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 02. காவிரி பிரச்சினையி;ல் ரஜினிகாந்த் நடித்த காலா படத்திற்கு, கர்நாடக மாநிலத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி ... Read More »

அருவாசண்ட“ படத்திற்காக ரம்யா நம்பீசன் பாடிய பாடல்…

post

சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.  அந்த காட்சிகாகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.“ இந்த படத்தில் மூன்று அட்டகாசமான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன்.வைரமுத்து எழுதிய “ சிட்டு ... Read More »

படக்குழுவினரே படத்திற்கான சர்ச்சையை உருவாக்குகின்றனர் ; அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் …

smiriti irani in FICCI 2018

படங்களை உருவாக்குவபவர்களே  வெளியாகும் முன்பு சர்ச்சையை உருவாக்குகின்றனர் என தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். மும்பையில் நடந்த ஃப்ரேம்ஸ் 2018 என்ற நிகழ்ச்சியில் ஸ்மிருதி இரானி சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார். இதில் திரைப்பட இயக்குனர் கரன் ஜோகருடன் நடைப்பெற்ற கேள்வி நேரத்தில் , திரைப்படங்களை உருவாக்கும் படக்குழுவினரே படத்திற்கான சர்ச்சையை உருவாக்குவதாக கூறினார் ஸ்மிருதி. மேலும், ”இதுபோன்ற சர்ச்சைகளை உருவாக்கி அனைவரின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர் . ஏனென்றால் அவர்களுக்கு நாம் நல்ல படங்களை எடுப்பதில்லை என தெரியும். ... Read More »

ஆஸ்கர் விழா ; பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு இரங்கல்…

20statement-earrings21

2018ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில்  மறைந்த இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்கர் விழாவில் கடந்த வருடம் மறைந்த திரையுலக கலைஞர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில்தென்னகத்து மயில் ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் ஜாம்பவான் சசி கபூர் ஆகியோர் இந்த வருட நிகழ்ச்சியில் இடம் பெற்றனர். இதனையடுத்து , ட்விட்டரில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள இது இந்திய சினிமாவை உலக அளவிற்கு எடுத்துச் சென்ற தருணம் என உணர்ச்சிகரமாக பதிவு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com