Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சினிமா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 20
Sunday , 16 January 2022
Home » சினிமா (page 20)

சினிமா

எனக்கு வேல முடிஞ்சிருச்சி… லண்டன் பறந்தார் ‘ 2 .0 ‘ நாயகி எமிஜாக்சன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துவரும் படம், ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. இதில் எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்தது. இத்தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார் எமி ஜாக்சன். இதுபற்றி அவர் ... Read More »

‘பாலா’வுக்கு வில்லன் நான்தான் …தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்!!

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குனர் பாலா.. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது வந்திருக்கும் புது சர்ப்ரைஸ் செய்தி என்னவென்றால், படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் ராக்லைன் வெங்கடேஷ்-க்கு நெகட்டிவ் ரோல் என்றும் சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே ஒரு சில கன்னடப்படங்களில் நடித்துள்ளார். ஒருவேளை ராக்லைன் வெங்கடேஷ் பாலாவின் படத்தில் நடித்தால், தமிழில் ... Read More »

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு ; சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் அந்தரங்கபுகைப்படங்கள் ….

பிரபல பின்னணிப்பாடகி சுசித்ரா. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும், வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். நேற்று காலை சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தளத்தில் நடிகர் தனுஷ், நடிகை திரிஷா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஆண்ட்ரியா, ஹன்சிகா, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது. இதனால் தமிழ்ப்பட உலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள சுசித்ரா “மர்மநபரால் எனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டது. நடிகர்களின் புகைப்படங்கள் என்னிடம் ஏதும் இல்லை. நான் ... Read More »

டிஜிட்டல் வெர்ஷனில் தயாராகியுள்ள ரஜினியின் பாட்ஷா…

டிஜிட்டல் வெர்ஷனில் தயாராகியுள்ள ரஜினியின் பாட்ஷா இன்று  வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாசத்துடன் உள்ளனர். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில படைப்புகளுக்கு இருக்கும் வரவேற்பும், அங்கீகாரமும் குறையவே குறையாது. அந்த வகையில் உள்ள ஒரு படம் தான் பாட்ஷா. 1995-ல் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் உள்பட பலர் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரியரில் இப்படம் மிக முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் தயாராகி உள்ளது. 5.1 டிஜிட்டல் ஒலி-ஒளி அமைப்பில் தயாராகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. ... Read More »

தமிழ் சினிமாவில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை …

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடிக்கும் ஆசை இல்லை என்று இந்தி நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ’தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். நல்ல கதைகளுடன் அங்கு படங்கள் உருவாகின்றன. ரஜினிகாந்த், மம்மூட்டி, பவன் கல்யாண் போன்ற சிறந்த நடிகர்கள் அங்கு இருக்கிறார்கள். மொழி தெரியாத படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பவில்லை. அதனால் தென்னிந்திய படங்களில் நடிக்கும் ஆசை இல்லை. மணிரத்னம் இயக்கத்தில் ’யுவா’ படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்’என்றார் கரீனா கபூர். Read More »

மதுரைக் கிளையில் நேரில் ஆஜரானார் நடிகர் தனுஷ்; எதற்க்காக ஆஜரானார் ?

நடிகர் தனுஷை தங்களது மகன் என்று உரிமை கோரி மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனுஷ் நேரில் ஆஜரானார். மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி, மனு தாக்கல் செய்தனர். மேலும், தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் ... Read More »

தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார்

89-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது.அதேபோல், சிறந்த அனிமேஷன் விருது ஜூடோபியா படத்துக்கு கிடைத்துள்ளது. தி லையன் கிங் படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரம் சுன்னி பவர் ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளார். Read More »

‘பீச்சாங்கை’

அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி,  ‘கர்ஸா என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர் எஸ்  கார்த்திக் மற்றும் ‘பி ஜி மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம்   ‘பீச்சாங்கை’.  சமீபத்தில்  விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த ‘பீச்சாங்கை’ படத்தின் டீசர், வெளியான சில நாட்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.   புதுமுகங்கள்  கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் ஆகியோர்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. “தற்போது ஒட்டுமொத்த உலகினரும், ஆஸ்கார் வருது பெற்ற பல ... Read More »

ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுபட்டியல்…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 89ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. மொத்தம் 24 பிரிவுகளில் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 6 விருதுகளை லா லா லேண்ட் படம் வென்றது. ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுபட்டியல் சிறந்த படம் – மூன்லைட் சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்) சிறந்த நடிகர் – கேஸி அஃப்லெக் (மான்செஸ்டர் பை த சீ) சிறந்த இயக்குனர் – டேமியன் சாஜெல்லே (லா லா லேண்ட்) சிறந்த ... Read More »

தவறுக்கு வருந்துகிறோம் ;ஆஸ்கர் விருது அறிவிப்பில் பிழை..

சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு மூன்லைட் படம் தேர்வாகி இருந்த நிலையில், லா லா லேண்ட் படம் விருது பெற்றதாக தவறுதலாக அறிவிக்கப்பட்டது. 89ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு லா லா லேண்ட் படம் தேர்வு செய்யப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் மூன் லைட் படமே சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதில், லா லா ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com