Thursday , 21 March 2019
Home » சினிமா (page 20)

சினிமா

தவறுக்கு வருந்துகிறோம் ;ஆஸ்கர் விருது அறிவிப்பில் பிழை..

picture__large

சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு மூன்லைட் படம் தேர்வாகி இருந்த நிலையில், லா லா லேண்ட் படம் விருது பெற்றதாக தவறுதலாக அறிவிக்கப்பட்டது. 89ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு லா லா லேண்ட் படம் தேர்வு செய்யப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் மூன் லைட் படமே சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதில், லா லா ... Read More »

ஆஸ்கர் விருதுகளை குவிக்கும் ‘லா லா லேண்ட்’ திரைப்படம் …

lalaland

2017-ம் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. 14 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, ஓர் இசைக் கலைஞருக்கும், ஹாலிவுட் நடிகைக்கும் இடையேயான காதலை மையமாகக் கொண்ட லா லா லேண்ட் படத்தின் இயக்குநர் டாமியன் சாஸ்ஸலின்-னுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. அதேபோல லா லா லேண்ட் படத்தில் பணியாற்றிய ஜஸ்டின் ஹர்விட்ஸுக்கு சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருது கிடைத்துள்ளது. இதே படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது லினஸ் சாண்ட்கீரினுக்குக் கிடைத்துள்ளது. Read More »

வெற்றி நிச்சயம் ‘புதிய மன்னர்கள்’ விஷால் அணி …

vishal_fb__large

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் தங்கள் அணிக்கு ‘புதிய மன்னர்கள்’ என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். விஷால் நடிகர் சங்க நிர்வாகியாக இருப்பதால் அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே, தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷாலுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நடிகர் சங்க தேர்தலின் போது ... Read More »

‘எமன்’ திரைப்படம் மூலம் உயரத்தை எட்டுவார் விஜய் ஆண்டனி”

IMG_4148a

‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா – பாகிஸ்தான்’, தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமோக வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’. நடிகர் தியாகராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. விஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தை ... Read More »

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் சிரஞ்சீவி உறவினர் நிகாரிகா!

Niharika_Konidela1xx

அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி – கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கடந்த வருடம் ஒக்க மனசு என்கிற தெலுங்குப் படம் மூலமாக கதாநாயகியான சிரஞ்சீவின் உறவினரான நிகாரிகா இதில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்கிறார். இது அவருடைய முதல் தமிழ்ப்படம். இந்தப் படத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். விஜய் சேதுபதியிடம் கதை சொன்னேன். அது அவருக்குப் பிடித்துப் போய் நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார் என இயக்குநர் ஆறுமுக குமார் கூறியுள்ளார். Read More »

விவேகம் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய்….

vivek_oberoi

இயக்குநர் சிவாவுடன் அஜித் இணையும் விவேகம் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் நடிக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை – அனிருத். அஜித் வெளிப்படுத்திய அன்பு குறித்து விவேக் ஓப்ராய் ட்விட்டரில் கூறும்போது: அஜித் அண்ணா மிகவும் தன்னடக்கத்துடன் பழகுவார். எல்லோரிடமும் அன்பு பொழிவார். அருமையான மனிதர். சென்னையில் அனைவரும் வெளிப்படுத்திய அன்புக்கு நன்றி என்று ... Read More »

ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!

sekarsaibarath_en

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளுக்காக டூபாடூ இசைத்தளத்தில் பாடல் ஒன்றை வெளியிட்டார் சேகர் சாய்பரத். இது இவரது முதல் பாடல் ஆகும். இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் பாடல் கேடிவியிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த தனிப் பாடலின் வெற்றியின் மூலம் சினிமா பட வாய்ப்பை பெற்றிருக்கிறார் சேகர் சாய்பரத். இயக்குநர் வெற்றிமகாலிங்கம் இயக்கும் விசிறி படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் சேகர் சாய்பரத். தல-தளபதி இருவரையும் ரசிகர்கள் கொண்டாடும் விதம் ஒரு பாடலை அமைத்திருக்கிறார். இது பற்றி சாய்பரத்திடம் கேட்ட போது “ரஜினி சாரோட தீவிர ... Read More »

‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வெளியிட்டிருக்கும் அடுத்த குறும்படம் – ‘டூமீ

unnamed (2)

புது புது படைப்பாளிகளை அவர்களது குறும்படங்கள் மூலம் கண்டெடுத்து, அவர்களை தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து, குறும்படங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கிறது ‘பெஞ்ச் பிலிக்ஸ்’. தரமான குறும்படங்களை மட்டுமே தயாரித்து வரும் இவர்களின் அடுத்த படைப்பு, ‘டூமீ’. வெளி ஊரில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் மூன்று இளைஞர்களை மையமாக கொண்டு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இந்த டூமி படத்தின் கதை. விறுவிறுப்பாக நகரும் இந்த படத்தின் கதை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்தமாக மாறி விடும். இது தான் ... Read More »

1.3 மில்லியனுக்கும் அதிகமான ‘யுடியூப்’ வாசிகளின் பாராட்டுகள் – ‘சர்வர் சுந்தரம்’ டீசர்

santhanam-in-server-sundaram

காதல் – அதிரடி – நகைச்சுவை – செண்டிமெண்ட் என எல்லா சிறப்பம்சங்களையும் சிறப்பான விதத்தில் பெற்று இருக்கிறது, சந்தானம் நடித்திருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று  வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டீசரே அதற்கு சிறந்த உதாரணம். இந்த டீசரை, சிலம்பரசன் தன்னுடைய பிறந்த நாளன்று (3.02.17) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ‘கெனன்யா பிலிம்ஸ்’ சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் ... Read More »

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

atlee-joins-with-jiiva-in-lsangili-bungili-kathava-thora-21r

A for Apple’ நிறுவனத்தின் சார்பில் அட்லீ  தயாரித்து,  ‘Fox Star Studios’ வழங்க இருக்கும்  திரைப்படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’.  இந்த படத்தின் மூலம் ‘நடிகவேல்’ எம் ஆர் ராதாவின் பேரனும், இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளருமான  ஹைக், தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் கமல்ஹாசனின் ‘விஷ்வரூபம்’ படத்திலும், அதன் இரண்டாம் பாகத்திலும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.  ஜீவா – ஸ்ரீதிவ்யா – சூரி  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் முதல் போஸ்டரும், டீசரும்  இந்த ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com