Friday , 16 November 2018
Home » சினிமா (page 2)

சினிமா

மீண்டும் புதிய தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

Sethupathi

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். புறம்போக்கு படத்தில் பணியாற்றியபோது விஜய்சேதுபதிக்கும் ரோகாந்த்துக்கும் நல்ல புரிதல் காரணமாக நட்பு உருவானது. அதேநேரம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் விஜய்சேதுபதியை அழைத்து, ரோகாந்த்திடம் உங்களுக்கேற்ற கதை ஒன்று இருக்கிறது என கூறி கேட்க வைத்தார். விஜய்சேதுபதிக்கு அந்த கதை பிடித்துப்போக அப்போதே ரோகாந்த்திடம் ஓகே சொல்லிவிட்டார். விஜய்சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருப்பதால் தற்போது ... Read More »

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு

sar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று காலை அறிவித்தது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க குறிப்பிட்ட ... Read More »

பெரியாரின் புத்தகங்களும் அவருடைய கருத்துக்களும் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தின-நடிகர் கமல்ஹாசன்

Kamal-Haasan

கமல்ஹாசன் தற்போது டெலிவிஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த மாதம் இறுதியில் இது முடிவதாக இருந்தது. ஆனால் மேலும் 5 நாட்கள் நீடித்து உள்ளனர். அதன்பிறகு இந்தியன்-2 பட வேலைகளை தொடங்குகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது அரசியல் சமூக விஷயங்களை கமல்ஹாசன் பேசி வருகிறார்.கமல்ஹாசன் சொல்வதை பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் மீது கால் போட்டுக்கொண்டு கேட்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அவர்களிடம் அந்த குறையை கவிஞர் சினேகன் சுட்டிக்காட்டினார். அவர் கூறும்போது “கமல்ஹாசன் பெரிய மனிதர். அவருக்கென்று மரியாதை இருக்கிறது. அவர் பேசும்போது கால் ... Read More »

பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் -நடிகர் விக்ரம்

Vikram

சி.சி.டிவி கேமரா பொருத்துவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நடிகர் விக்ரம் நடித்துள்ள விழிப்புணர்வு குறும்படத்தை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார். இம்மாத இறுதிக்குள் சென்னை மாநகர் முழுவதும் சி.சி.டிவி கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சென்னை காவல் துறை ஆணையர் கேட்டுக் கொண்டதன் பேரில், அவரது கல்லூரி நண்பர் என்ற வகையில் நடிகர் விக்ரம், சி.சி.டிவி விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார்.சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்தக் குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் ... Read More »

அன்னை தெரசா விருதுக்கு மரியாதை கொடுக்க இனி ஒயின் கூடகுடிக்க மாட்டேன்

2

அன்னை தெரசாவின் 108–வது பிறந்தநாள், சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகரும், டைரக்டருமான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். அவருக்கு, ‘அன்னை தெரசா’ விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் பேசியதாவது:– ‘‘இந்த உலகில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் கருதுவது, தாயைத்தான். அம்மா இல்லையென்றால் நான் இல்லை. ராயபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்து நானும், அம்மா மற்றும் மூன்று சகோதரிகளும் வறுமையை எப்படியெல்லாம் அனுபவித்தோம்? என்பதை சொல்லி மாளாது. அதனால்தான் நான் இப்போது சம்பாதிப்பதை ஏழை மக்களுக்கு கொடுக்கிறேன்.சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட், ... Read More »

மோகன்லால் வெளியிட்ட விநாயகர் படம்

Mohanlal

விநாயகர் சதுர்த்தி, நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. பல சினிமா நட்சத்திரங்கள் இணையதளம் மற்றும் சமூகவலை தளம் மூலம் வாழ்த்து தெரிவித்தார்கள். சில நடிகர்–நடிகைகள் தங்கள் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட விநாயகர் சிலையை படம் பிடித்து இணையத்திலும், சமூகவலை தளங்களிலும் வெளியிட்டு, வாழ்த்து கூறினார்கள். அவர்களில், மலையாள சூப்பர் நடிகர்களில் ஒருவரான மோகன்லால் வெளியிட்ட விநாயகர் படம், அனைவராலும் பேசப்பட்டது. விநாயகரை குத்துச்சண்டை வீரர் போல் அலங்கரித்து, பக்கத்தில் மோகன்லால் நிற்பது போன்ற அந்த புகைப்படம் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து இருக்கிறது. Read More »

ரூ.9 கோடி இழப்பு-வடிவேல் நடிக்க தடை

vadivelu

வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்கினார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படத்தில் நடித்த வடிவேலு ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்கையும் பிரித்து விட்டனர்.இந்த ... Read More »

மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் ரஜினிகாந்தின் 2.0

6

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.542 கோடிக்கு மேல் செலவில் எடுத்துள்ள இந்த படம் நவம்பரில் திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக உற்சாகம் அடைந்துள்ளனர்.ராட்சத பறவைகளும் செல்போன்களும் டிரெய்லரில் முக்கியத்துவம் பெற்று இருப்பதால் செல்போன் டவர்களால் பறவைகளுக்கு நேரும் பாதிப்புகளை படத்தில் பேசி இருக்கலாம் என்று யூகமும் உள்ளது. கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் டிரெய்லர் பிரமிப்பாக உள்ளது என்கின்றனர். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் மிரட்டி ... Read More »

பாகுபலியை மிஞ்சிய ரஜினிகாந்தின் 2.0 கிராபிக்ஸ்

robot

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே படம் வெளியாகும் தேதிகளை அறிவித்து தள்ளிவைத்து விட்டனர். கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்றனர். வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர். நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் ... Read More »

நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை

1

தமிழ் நாட்டில் பிறந்து இந்தி பட உலகில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, இந்தியில் 300 படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை மணந்த இவருக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்று இருந்தபோது அங்குள்ள ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஆவண படமாக தயாராகிறது. சினிமா படமாக எடுக்கவும் முயற்சிகள் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com