Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சினிமா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 10
Sunday , 16 January 2022
Home » சினிமா (page 10)

சினிமா

நன்றி நன்றி நன்றி !! மெர்சல் பாடலாசிரியரின் விபரீத வாக்குமூலம் …

மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனக்கு பாடல் எழுதும் பாக்கியம் கிடைத்ததாக பாடலாசிரியர் விவேக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளர். 36 வயதினிலே படத்தில் வாடி ராசாத்தி, இறைவி படத்தில் மதினி, கபாலி படத்தின் உலகம் ஒருவனுக்கா உள்ளிட்ட பல பாடல்களை எழுதியவர் விவேக். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மெர்சல் படத்தில் விவேக் பாடல் எழுதியுள்ளார். மெர்சல் படத்தின் ஆடியோ ஆகஸ்டு 20ம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’மெர்சல் படத்திற்காக பாடல்களை எழுதியுள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடல் எழுத ஒருசில ... Read More »

சிங்கம் எங்கதங்கம் ; தானா சேர்ந்த கூட்டம் பர்ஸ்ட் லுக்…

’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்த ... Read More »

மீண்டும் ஒரு நீலாம்பரி ; ’விஐபி 2’ வில் கலக்கும் கஜோல் …

’விஐபி 2’ படத்தில் கஜோல் நடித்துள்ள கேரக்டர் பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்த் விளக்கியுள்ளார். தனுஷ், கஜோல், அமலா பால், விவேக், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘விஐபி 2’. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதில் கஜோல் கேரக்டர் பற்றி சவுந்தர்யா கூறும்போது, ‘கடந்த 20 வருடமாக கஜோல் ஏன் தமிழில் நடிக்கவில்லை என்று தெரியவில்லை. இந்தப் படத்தில் வசுந்தரா பரமேஸ்வரன் என்ற கேரக்டரில் அவர் நடிக்கிறார். அந்தக் கேரக்டருக்கு பிரமாதமாக உயிர் கொடுத்திருக்கிறார். ’மன்னன்’ படத்தின் ... Read More »

எனது சினிமா வாழ்வை மாற்றிய படம் ’கூட்டத்தில் ஒருத்தன்’ ; பிரியமுடன் பிரியா ஆனந்த்…

பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள படம், ‘கூட்டத்தில் ஒருத்தன்’. அசோக் செல்வன், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ளனர். படம் பற்றி பிரியா ஆனந்த் கூறும்போது, நான் இந்த படத்தின் கதையை கேட்கும் முன், எந்த படத்திலும் இனி நடிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். என் மனநிலை இருந்தது. ’கூட்டத்தில் ஒருத்தன்’ கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அவ்வளவு பாஸிடிவான கதை இது. மிக சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம்’ என்றார். ... Read More »

தல தளபதிக்கு தொடந்து இசையமைக்கும் அனிருத் …

விஜய் நடிக்கும் 62 வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயின் படத்தை மீண்டும் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப்டத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். தற்போது அவர் இசையமைத்துள்ள விவேகம் படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது. விஜயின் 62 வது படத்திற்கான பாடல்களின் இசைக்கோப்பிற்காக வரும் செப்டம்படம்பர் மாதம் அனிருத் அமெரிக்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது அட்லீ ... Read More »

கோபுரம் முதல் குப்பமேடு வரை ; ‘ஒரு குப்பைக் கதை’ எனும் படத்தை வெளியிட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

நடன இயக்குநர் தினேஷ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு குப்பைக் கதை’ எனும் படத்தை தனது நிறுவனம் சார்பில் வெளியிட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பெரும் ஹீரோக்கள், அதிக பட்ஜெட் படங்களை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கி வெளியிடும் சூழல் மாறி எதார்த்தமான கதையம்சம் சிறிய பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடும் போக்கு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இந்த ஆரோக்கியமான சூழலில் சில ஆண்டுகளுக்கு முன்பே மைனா படத்தை வாங்கி வெளியிட்டது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ். தற்போது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ... Read More »

யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை ; நடிகை டாப்ஸி விளக்கம் …

தெலுங்கு இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கிய ‘ஜும்மாண்டி நாதம்’ என்ற படம் மூலம் ஹீரோயின் ஆனார் டாப்ஸி. தெலுங்கை அடுத்து தமிழ், இந்தி படங்களில் நடிக்கத் துவங்கினார். இப்போது இவர் இந்தியில் நடித்த ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் ஹிட்டாகின. இந்நிலையில் டாப்ஸி தென்னிந்திய சினிமா பற்றி சொன்ன கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறும்போது, ’கிளாமர் கேரக்டர்களில் மட்டுமே என்னால் நடிக்க முடியும் என்று தென்னிந்திய சினிமாவில் நினைக்கிறார்கள். பிங்க் மற்றும் நாம் ஷபானா படங்களை பார்த்த பிறகே, ’ஓ. இந்த பொண்ணுக்கு ... Read More »

நடிகையின் ரகசிய திருமணம் அம்பலமானது …

தமிழில் ’மத்திய சென்னை’ படத்தில் ஜெய்வந்த் ஜோடியாக நடித்தவர் ரம்யா பர்னா. கன்னட நடிகையான இவர் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் வசித்துவந்த இவர், சிவாஜி நகரில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ரகசிய திருமணம் கடந்த மே மாதம் நடந்துள்ளது. நடிகை ரம்யா பர்னா, தன்னை விட 2 வயது குறைந்த பகாத் லிகான் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். பகாத், ஜனதா தளம் (எஸ்) கட்சி பிரமுகர் அப்துல் என்பவரின் மகன். இதுபற்றி, நடிகை ரம்யா பர்னா ... Read More »

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகள் …

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். போதை பொருள் கடத்தல் தொடர்பாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். பியூஸை கைது செய்த போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான ... Read More »

‘விவேகம்’ அஜீத்தின் அதிவேகம் ; அனுபவங்களை பகிர்கிறார் ஒளிப்பதிவாளர் ‘வெற்றி’…

விவேகம் ஷூட்டிங்கில் நடந்த நல்லங்களையும், அஜீத்துக்கு ஏற்பட்ட சிரமங்களையும் பகிர்ந்து கொள்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றி. ’பல்கேரியாவில் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது ஒருநாள் முக்கியமான காட்சியை படமாக்கினோம். அங்குள்ள மக்கள் அப்போது மழை வரப்போவதாக கூறினர். ஆனாலும் அந்தக் காட்சியை அன்றே எடுத்தாக வேண்டும். அன்று வியாழக்கிழமையும் கூட… என்ன செயவதென்று எங்களுக்குப் புரியவில்லை. மழை வந்துவிடக்கூடாது என அனைவரும் வேண்டினோம். எங்கள் வேண்டுதல் பலித்தது. நாங்கள் எடுக்க வேண்டிய அனைத்துக் காட்சிகளையும் ஷூட் செய்து முடித்து விட்டுக் கிளம்பிய பிறகே மழை பெய்யத் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com