Monday , 18 February 2019
Home » Author Archives: admin

Author Archives: admin

டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை

7

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தி£ 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா  104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி ‘பாலோ–ஆன்’ ஆனது. ஸ்டார்க் 29 ரன்களுடன் (55 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.  இந்திய ... Read More »

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ்

prakash-raj

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார். இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை. இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ், பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். ... Read More »

புதுக்கோட்டை திருமயம் அருகே,லாரியும், வேனும் மோதிக்கொண்ட கோர விபத்து!

3

புதுக்கோட்டை திருமயம் பிரிவு சாலையில் கண்டெய்னர் லாரியும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெம்போ டிராவலர் வேனில் ஆந்திராவைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வேன் புதுக்கோட்டை திருமயம் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 7-பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர், ... Read More »

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும்!

2

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.ஆதார் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தீர்ப்பளித்தது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் குழந்தைகளுக்கு ஆதாரம் கட்டாயம் எனவும், ஆதார் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், பஞ்சாப்பில் நடைபெற்று வரும் ... Read More »

நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழக அரசு எச்சரிக்கை!!

1

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் அரசு எச்சரித்து உள்ளது. இது குறித்து அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு ஒருசில தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி அரசு நிர்வாகத்தைப் பாதித்தால் அது விதிகளை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். விதிகளை மீறும் ஊழியர்கள் ... Read More »

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

1

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் காலியான இத்தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 28ந் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தன. தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமை தேர்தல் ஆணையத்தில் ... Read More »

திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா?! ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!!

2

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹ_ உத்தரவிட்டுள்ளார். காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜனவரி 28இல் வாக்குப் பதிவும், ஜனவரி 31 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தலில் முறைகேடுகளை ... Read More »

பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்கும் திட்டம்!

1

பொங்கல் தொகுப்போடு சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலாக்காய், கரும்புத்துண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 நியாயவிலை அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க 258 கோடி ரூபாய் ஒதுக்கி ஏற்கனவே ... Read More »

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு

kalaivanan

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் பூண்டி கலைவாணனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கலைஞரின் மறைவை அடுத்து, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வதற்கான நேர்காணல், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில், வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், ... Read More »

தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியது!

nirmala seetharaman-

தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகின்றது. ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று பாஜக தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில், தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியதாகவும், எதிர்பார்த்த ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com