Tamilan Television - the soul of the world tamils
Honey Ad Real Gold Ad
Tamilan Television - the soul of the world tamils

தமிழன் தொலைக்காட்சி 2002, ஆகஸ்டு மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
2002 அக்டோபர் 14ஆம் நாள் சோதனை ஒளிப்பரப்பு தொடங்கப்பட்டது.
2003 பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் முதல் தனது முழுமையான ஒளிப்பரப்பை உலக மக்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழன் தொலைக்காட்சி தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் ஒளிபரப்பாகிறது.

நிறுவனர்


திரு.கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனரும், மேலாண் இயக்குநரும் ஆவார்.

இவர் கன்னியாகுமரி மாட்டம் கட்டிமான்கோடு கிராமத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர் பொன். காசி உதயம், அன்னப்பழம்.
இவரின் தந்தையார் இலங்கையில் 'வீரகேசரி', 'ஸ்லோன் டைம்ஸ்' இதழ்களில் பணியாற்றி இலங்கை சமசமாஜ கட்சியில் போலிட்பீரோ உறுப்பினராகவும், அக்கட்சி இதழான 'சமதர்மம்' இதழின் ஆசிரியராக இருந்தவர்.
பின்னர், தாயகம் திரும்பி திருகொச்சி மாநிலத்தின் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் முன்னணி தலைவராகவும், குமரிமாவட்டத்தில் முதன் முதலாக தொழிற்சங்கம் ஆரம்பித்தவர்.

திரு.கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் விவேகானந்தா கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பில் இயற்பியல் படித்தவர்.
மதுரை நாடார் மகாஜன சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர்.
தென் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவர், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ஆவார்.

திரு. கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் எழுத்தாளராக முன்னணி தமிழ் இதழ்களிலிலும், பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   7 பேர் இன்று : 38 நேற்று: 2800 மொத்தம்: 8955515
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்