நில அளவையர்களை வயலில் இறங்கவிடாமல் மண்ணில் புரண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செங்கம் பகுதிகளில் பசுமை வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி 2 ஆம் கட்ட பணியின்போது நில அளவை செய்யும் பணிக்காக நில அளவையர்களை வயலில் இறங்கி விடாமல் விவசாயிகள் மண்ணில் புரண்டு ஆர்ப்பாட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் சென்னை – சேலம் பசுமை வழி சாலை அமைக்கும் பணியில் நில அளவை செய்யும் பணி தற்போது 2 ஆம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி அளவிடும் பணி 3 குழக்களாக நீப்பத்துறையிலிருந்து செங்கம் வரையிலும் செங்கத்திலிருந்து தொரப்பாடி ஆகிய இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் நில அளவை செய்வதற்காக நில அளவையர்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட போலிஸ் பாதுகாப்புடன் அளக்க முற்படும்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிலஅளவியர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது விவசாய நிலத்தில் புரண்டு புலம்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்தங்களது மூதாதையர்கள் சேர்த்து வைத்த சொத்தினை தங்களது தலைமுறைக்கு காப்பாற்றி வைக்கமுடியவில்லையே என கண்ணீர் மல்க கதரினர்.இதனால் அதிகாரிகள் நில அளவை செய்யும் பணியினை நிறுத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Home » மாவட்டம் » திருவண்ணாமலை » 8 வழி பசுமை சாலை நிலம் கையகப்படுத்தும் பணி மண்ணில் புரண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!