Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடு » 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு

சென்னையிலும், திருவண்ணாமலை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலையில் பரவலாக மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை 3 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் அதிகாலையிலும் மிதமான மழை பெய்தது.

நாகை

நாகை மாவட்டத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. திருவாய்மூர், திருக்குவளை, எட்டுக்குடி, சீராவட்டம், திருமணங்குடி, கீழையூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு ஒரு மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேராவூர், அம்மன்கோவில், சத்திரக்குடி, கீழக்கரை, சிக்கல், சத்திரக்குடி, தேவிப்பட்டினம் போன்ற இடங்களில் காலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலையில் இடி மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையம்

இதனிடையே, குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com