Monday , 20 November 2017
Home » இந்தியா » 4 ஆண்டுகளில் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை குறைக்கப்படும் ;நிதி ஆயோக் அமைப்பு

4 ஆண்டுகளில் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை குறைக்கப்படும் ;நிதி ஆயோக் அமைப்பு

niti-aayog-14 ஆண்டுகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக  அமிதாப் கந்த் செயல்பட்டு வருகிறார். இந்த நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆலோசனை வழங்கி வருகிறது.

இந்நிலையில் நொய்டாவில் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமிதாப் கந்த், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் டெபிட், கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இதேபோல், தேவையற்ற ஏடிஎம்கள் கண்டறியப்பட்டு அதன் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சர்வதேச அளவில் ஆதார், செல்போன், வங்கி கணக்கு அதிகம் வைத்திருப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குவதால், செல்போன் மூலம் பரிவர்த்தனையை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com