Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
3 தங்கப் பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி வீரர்… | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » 3 தங்கப் பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி வீரர்…

3 தங்கப் பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி வீரர்…

20makossports-WA0033உயரம் குன்றியவர்களுக்கான உலக தடகள போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி வீரர் கணேசனுக்கு, அவரது கிராம மக்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உயரம் குன்றியவர்களுக்கான 7-வது உலக தடகள போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 12-ம் தேதி வரை கனடாவில் நடைபெற்றது. இதில் 62 நாடுகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தடகளம், நீச்சல், கால்பந்து, ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியா சார்பில் 18 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். நாட்டுக்கே பெருமை சேர்த்த கணேசன் நேற்று உசிலம்பட்டி திரும்பினார். அவரை கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்கவும் உற்சாகமாக வரவேற்றனர்.

கணேசன் கூறும்போது, “விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் மிகுந்த சிரமத்துக்கிடையே போட்டியில் கலந்து கொண்டேன். பாராலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற மாரியப்பனுக்கு அளித்த உதவிகள் போன்று, எனக்கும் அரசு நிதிஉதவி அளித்து ஊக்கப்படுத்தினால், மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று பெருமை சேர்ப்பேன்” என்றார்.

கனடாவில் நடைபெற்ற இந்த உலக தடகள போட்டியில் மதுரையை சேர்ந்த எம்.இ. பட்டதாரி மனோஜ், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர் செல்வராஜ் ஆகியோரும் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com