ஓடிசா மாநில பழங்குடியின மூதாட்டி ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக கழிவறையில் வசித்து வரும் அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்த திரௌபதி பெஹரா என்ற அந்த மூதாட்டி கணவர் இறந்ததால், மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். வீடு கட்ட வசதியில்லாததால், ஊராட்சி சார்பில் கட்டித்தரப்பட்ட கழிவறையில் அவர்கள் மூவரும் வசித்து வருகின்றனர்.
அந்த சிறிய அறைக்குள் சமையல் செய்வதோடு, அதனுள்ளேயே மூதாட்டி படுத்துக் கொள்கிறார். அவரது மகளும் பேரனும் வெளியில் படுத்துறங்குகின்றனர். மூதாட்டிக்கு வீடு கட்டித்தர தனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறும் ஊராட்சி செயலர், அரசு திட்டங்களின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.