2020ம் ஆண்டு குடியரசு தின விழாவில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேசிலில் நடைபெறும் 11வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனேரோவை சந்தித்து பேசினார். அப்போது 2020ம் ஆண்டு ஜனவரி 26ல் நடைபெறவுள்ள இந்தியக் குடியரசு தினவிழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, போல்சனேரோவுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.