Tuesday , 22 May 2018
Home » இந்தியா » 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு

2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு

தெலுங்கான விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்-க்கு 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது.

தெலுங்கான விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் 2017-ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கான விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அதில், 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தேர்வு செய்யப்பட்டார். தெலுங்கான மாநில ஆலோசகர் வழங்கிய அந்த விருதை மிதாலியின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும், பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்துக்கு சிறந்த மூத்த ஆண் தடகள வீரர் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு மூத்த பெண் தடகள வீராங்கனை விருதும் வழங்கப்பட்டது. இதுதவிர, மேலும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com