Tuesday , 22 January 2019
Home » இந்தியா » 144-தடையை மீறி நடைபெற்ற போராட்டங்களால் சபரிமலையில் பரபரப்பு !!

144-தடையை மீறி நடைபெற்ற போராட்டங்களால் சபரிமலையில் பரபரப்பு !!

sabariசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்கள் செல்வதை எதிர்த்துப் பக்தர்களும் இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்றுமாலை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்துப் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐயப்பன் கோவிலைச் சுற்றிய பகுதிகளில் முதன்முறையாகப் பெண் காவலர்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஐந்தரைமணியளவில் பக்தர்களில் ஒரு பிரிவினர் திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சூரில் இருந்து வந்த கிரிஜா, சுஜாதா ஆகிய 2-பெண்களைச் சூழ்ந்துகொண்டு அவர்களைக் கோவிலுக்குள் விட மறுத்தனர்.
கடந்த அக்டோபரில் பெண்கள் நுழைவதற்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஐயப்ப தர்ம சேனா, சபரிமலை கர்ம சமிதி உள்ளிட்ட அமைப்பினர் பக்தர்கள் போல வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வழிபாட்டுக்குப் பின் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று இரவு 10-மணிக்குச் சாத்தப்படவுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com