Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா

6நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மகா புஷ்கர விழா பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, உள்ளிட்ட இடங்களில் உள்ள படித்துறைகளில் இன்று நடைபெற உள்ளது. இங்கு புனித நீராட வட நாட்டில் இருந்து ஏராளமான சாமியார்கள் நெல்லைக்கு வந்துள்ளனர். இந்த மகா புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆற்றில் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபநாசத்தில் காலை 10 மணிக்கு மகா புஷ்கர விழாவை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து அங்கு நடக்கும் துறவிகள் மாநாட்டில் விழா மலரை வெளியிடுகிறார். 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தினமும் புனித நீராடல், ஹோமங்கள், வேள்விகள் வளர்த்தல், தர்ப்பணம், அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com