Thursday , 16 August 2018
Home » இந்தியா » 10-ம் வகுப்புற்கு மறு தேர்வு கிடையாது : சிபிஎஸ்இ…!

10-ம் வகுப்புற்கு மறு தேர்வு கிடையாது : சிபிஎஸ்இ…!

27826-ledndexuqh-1485919636சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணித தேர்விற்கு மறு தேர்வு நடத்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய தேர்வின் போது, வினாத்தாள் வெளியான விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 12 -ம் வகுப்பு பொருளியல் தேர்வை வரும் 25-ம் தேதி மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதேபோல், 10 -ம் வகுப்பு கணித தேர்வை ஹரியானா மற்றும் டெல்லியில் மட்டும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதனை கண்டித்து 10 -ம் வகுப்பு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு கணித தேர்விற்கு மறுதேர்வு நடத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com