Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார் ஓ.பன்னீர் செல்வம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடு » ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்

ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின்னர், தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டை திறந்துவைத்தார். மேலும், ஸ்ரீ பத்மினி ரங்கநாதன் ட்ரஸ்டி சார்பில் பண்பின் சிகரம் என்ற பட்டமும், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம் சார்பில் வீரத்தமிழன் என்ற பட்டமும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, வாஷிங்டன் நகரில் அமெரிக்க-இந்திய சிறிய நடுத்தர தொழில் முதலீட்டாளர் கவுன்சில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் தொழில் தொடங்க முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com