Friday , 16 November 2018
Home » உலகம் » ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம், 50 சதவீதம் அதிகரிப்பு!

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம், 50 சதவீதம் அதிகரிப்பு!

swiss national bankஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் கடந்த ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் கருப்புப் பண வேட்டையில் ஈடுபட்டிருக்கும் மோடி அரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதும் வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உறுதி பூண்டு நடவடிக்கைளை மேற்கொண்டது. இதன் காரணமாக 3 ஆண்டுகளில் ஸ்விஸ் வங்கிகளில் இந்திய முதலீடுகள் குறைந்தன. ஆனால் கடந்த ஆண்டில் திடீரென ஸ்விஸ் வங்கியில் செய்யப்பட்ட முதலீடு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் ரூபாய் மதிப்பு சுமார் 7 ஆயிரம் கோடியாகும். இது கருப்புப் பண வேட்டையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செய்யப்பட்ட முதலீடுகள் 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாக ஸ்விட்சர்லாந்து தேசிய வங்கி அறிவித்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com