Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஸ்ரீவில்லிப்புத்தூரில் சமையல் செய்யாத காரணத்தால், கணவனே குடிபோதையில் மனைவியை வெட்டி கொலை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » ஸ்ரீவில்லிப்புத்தூரில் சமையல் செய்யாத காரணத்தால், கணவனே குடிபோதையில் மனைவியை வெட்டி கொலை

ஸ்ரீவில்லிப்புத்தூரில் சமையல் செய்யாத காரணத்தால், கணவனே குடிபோதையில் மனைவியை வெட்டி கொலை

murderஸ்ரீவில்லிப்புத்தூரில் சமையல் செய்யாத காரணத்தால், கணவனே குடிபோதையில் மனைவியை வெட்டி கொலை செய்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு அகத்தீஸ்வரன் என்ற மகன் உள்ளார். கணேசன் இராஜபாளையத்தில் காய்-கறி கடை ஒன்றில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார்.குடிபழக்கத்திற்கு அடிமையான கணேசன் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணேசன், மனைவி சமையல் செய்யாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதனால் கோபம் அடைந்த அகத்தீஸ்வரன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த கணேசன் மனைவி கஸ்தூரியின் தலையை சுவற்றில் மோதியதோடு அல்லாமல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதையறிந்த அக்கம், பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச்சென்ற காவல்துறையினர் தலைமறைவான கணேசனை கைது செய்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com