Thursday , 16 August 2018
Home » சிறப்புச் செய்திகள் » ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

protest_10ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் குமரெட்டியாபுரம்  கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சில்வர்புரம் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகே  செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால், காற்று மாசுபாடு அடைவதுடன் அப்பகுதியில் விவசாயம் மற்றும் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்படும் அபாயம்  உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக  மூடக்கோரி குமரெட்டியாபுரம்  கிராம மக்கள் 54-நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குமரெட்டியாபுரம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சில்வர்புரம் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த போராட்டத்தில் சில்வர்புரம், சுப்பரமணியபுரம், வி.எம்.எஸ் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு, ஆலையினை நிரந்தராமாக மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com