Friday , 16 November 2018
Home » மாவட்டம் » ஈரோடு » ஸ்டெர்லைட் ஆலையில் 2 நாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும் !!

ஸ்டெர்லைட் ஆலையில் 2 நாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும் !!

MINISTER KARUPPANNANதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் 2 நாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறினார்.ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கோனார்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் கல்வித்துறை சார்பில் புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் சீருடைகள் மாற்றப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையான வண்ண வண்ண சீருடை அணிந்து மாணவர்கள் செல்கிறார்கள்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கந்தக அமிலம் வாயு கசிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.இன்னும் 2 நாட்களில் அவை முற்றிலும் அகற்றப்பட்டுவிடும். தூத்துக்குடி மக்கள் கவலைப்பட வேண்டாம். அச்சப்படவும் வேண்டாம்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com