Monday , 23 October 2017
Home » மாவட்டம் » கோயம்புத்தூர் » வேளாண் படிப்புகளுக்கு இன்று இறுதிக் கட்ட கலந்தாய்வு…

வேளாண் படிப்புகளுக்கு இன்று இறுதிக் கட்ட கலந்தாய்வு…

tnau1-1வேளாண் படிப்புகளுக்கு கோவையில், இன்று இறுதிக் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு மற்றும், 19 இணைப்பு கல்லுாரிகளில், வேளாண்மை, தோட்டக் கலை, இளநிலை தொழில்நுட்பம் என, 13 வகை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர, முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த ஜூன் 24ஆம் தேதி நிறைவடைந்தது.

நீட் தேர்வு முடிவுகளால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர், ஆகஸ்ட் 28 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதிலும், காலியிடங்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்ததால், கடந்த 2 முதல் 4ஆம் தேதி வரை, கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது. ஆயினும், காலியிடங்கள் நிரம்பவில்லை. 636 இடங்கள் காலியாக இருப்பதால், இன்று முதல் 13ஆம் தேதி வரை, இறுதிக்கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வில், பொதுப்பிரிவினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கும், 13ஆம் தேதி, சிறப்பு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com