Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வெளிநாடுகளில் சட்ட விரோதமாக, பணம் பதுக்குவோர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » முக்கிய செய்திகள்: » வெளிநாடுகளில் சட்ட விரோதமாக, பணம் பதுக்குவோர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை!

வெளிநாடுகளில் சட்ட விரோதமாக, பணம் பதுக்குவோர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை!

Parlimentகருப்புப் பணத்தை பதுக்குதல் தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வழிசெய்யும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கணக்கில் வராத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் மசோதா-2015 எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கடந்த பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த மசோதா குறித்த மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது, இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. வெளிநாட்டு வருமானம் குறித்து முறையாக கணக்குக் காண்பிக்காமல் இருத்தல், வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட குற்றங்கள், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும். இந்த குற்றவாளிகள், தண்டனையைக் குறைக்க வேண்டி தீர்ப்பாயத்தை அணுக முடியாது. மேலும், ஏய்ப்பு செய்யப்பட்ட வரியைப் போல் 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யாதிருத்தல் அல்லது முழுமையாக தாக்கல் செய்யாதிருத்தல், வெளிநாட்டுப் பணத்தின் மூலம், உள்நாட்டில் வாங்கப்பட்ட சொத்து விவரங்களை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். வெளிநாட்டில் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பான விவரங்களை மறைத்தல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட ஷரத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன. இது நிதி தொடர்பான மசோதா என்பதால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு, மக்களவையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இடைவெளிக்கு முன்பே இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முனைப்புடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com