Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வெங்காய விலை மீண்டும் உயர்வு..! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடு » வெங்காய விலை மீண்டும் உயர்வு..!

வெங்காய விலை மீண்டும் உயர்வு..!

வரத்து குறைந்ததால் சென்னையில் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழையின் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதால், 80 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ வெங்காயம் கடந்த வாரம் 60 ரூபாயாக வரை குறைந்தது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் வெங்காயத்தின் வரத்து மீண்டும் குறைந்துள்ளதால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 60 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com