Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வீரபாண்டிய பட்டினத்தில் சாலைவசதி மற்றும் குடிநீர்த்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » தூத்துக்குடி » வீரபாண்டிய பட்டினத்தில் சாலைவசதி மற்றும் குடிநீர்த்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா

வீரபாண்டிய பட்டினத்தில் சாலைவசதி மற்றும் குடிநீர்த்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா

vlcsnap-2015-04-13-09h44m00s231தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டினத்தில் சாலைவசதி மற்றும் குடிநீர்த்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் பொன்கல்யாண சுந்தரனார் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தூத்துக்கு-திருச்செந்தூர் இணைப்பு சாலையை உடனடியாக அமைக்க வேண்டும், வீரபாண்டி பட்டினத்திற்கு குடிநீர்; திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ரேஷன் பொருட்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ரவிச்சந்திரன், தமிழ்செல்வன், துரைராஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com