Friday , 19 October 2018
Home » மாவட்டம் » கிருஷ்ணகிரி » வீட்டில் போலி மதுப்பானம் தயாரித்து விற்பனை செய்தவர் கைது செய்து

வீட்டில் போலி மதுப்பானம் தயாரித்து விற்பனை செய்தவர் கைது செய்து

vlcsnap-2018-08-03-10h26m53s906கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளி கிராமத்தில், வெள்ளை ராஜா என்பவரது வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக வந்த ரகசிய தகவல் வந்தது..இதனையடுத்து கிருஷ்ணகிரி மதுவிலக்கு காவல் துணைக்கண்காணிப்பளர் சரவணன் தலைமையில், மதுவிலக்கு காவல்துறையினர் வெள்ளை ராஜா என்பவரது வீட்டினை சோதனை மேற்கொண்டனர். அப்போது போலி மதுபானம், எரிச்சாரயம் மற்றும் போலி மதுப்பானம் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மது விலக்கு காவல்துறையினர் – 200 லிட்டர் எரிச்சாயம், போலி மதுபாட்டில்கள் மற்றும் போலி மதுப் பானங்கள் தயாரிப்பு தேவையான காலி பாட்டில்கள், மூடிகள், ஸ்டிக்ர்கள், கலர்ப்பெடிகள், மதுபானங்களை எடுத்து செல்ல பயன்படுத்திய கார் ஆகியவற்றினை பறிமுதல் செய்து, மது விலக்கு அலுவலகம் கொண்டு வந்ததனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து,
போலிமதுபானம் தயாரித்துக்கொண்டிருந்த நெடு சாலை கிராமத்தை சேர்ந்த மாதேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து மூலப்பொருட்களை வாங்கி வந்து, போலி மதுபானங்கள் தயாரித்து மதுபானக் கடைகளுக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓ்டிய வெங்கடேஷ் என்பவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.வீட்டில் வைத்து போலி மதுப்பானங்கள் தயாரித்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது, .

Facebook Auto Publish Powered By : XYZScripts.com