Tuesday , 30 November 2021
Home » மாவட்டம் » கன்னியாகுமரி » விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண புதிய நடைமுறை

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண புதிய நடைமுறை

கன்னியாகுமரியில் சீசன் காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகு போக்குவரத்துக்கு நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்துக் கிடப்பதை தடுக்க டோக்கன் வினியோக முறை அமல்படுத்தப்பட உள்ளது.

கன்னியாகுமரியில் வரும் 15ஆம் தேதி சீசன் துவங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள், பேரூராட்சி மற்றும் சுற்றுலா அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரசாந்த் வடநேரு, வடநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com