Monday , 20 November 2017
Home » சினிமா » ‘விவேகம்’ படத்தை ஓரம் கட்டிய ‘மெர்சல்’ சாதனை…

‘விவேகம்’ படத்தை ஓரம் கட்டிய ‘மெர்சல்’ சாதனை…

Ajith_Vjayவிஜய்யின் மெர்சல் திரைப்படம் ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் 23 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் முதல் நாளில் சென்னையில் 1 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கபாலி, விவேகம் திரைப்படங்களின் வசூல் சாதனையை மெர்சல் முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 23 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளில் ஆஸ்திரேலியாவில் 68 லட்சம் ரூபாயும், பிரிட்டனில் 81 லட்சம் ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிகிறது. மலேசியாவில் 800 திரையரங்குகளில் வெளியான மெர்சல் 90 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com