Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விவசாயிகளை பாதிக்கும் பசுமை வழி சாலை வேண்டாம், நீர் வழிசாலைகள் அமைக்க வேண்டும் !! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » கிருஷ்ணகிரி » விவசாயிகளை பாதிக்கும் பசுமை வழி சாலை வேண்டாம், நீர் வழிசாலைகள் அமைக்க வேண்டும் !!

விவசாயிகளை பாதிக்கும் பசுமை வழி சாலை வேண்டாம், நீர் வழிசாலைகள் அமைக்க வேண்டும் !!

vlcsnap-2018-07-06-12h25m11s595கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளை பாதிக்கும் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகள் போரட்டங்களில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நூற்றுகணக்கானவர்கள் பங்கேற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் எஸ் எஸ் ரங்கசாமி தலைமையில் நடைபெர்ற இதில் மாநில பொதுச்செயலாளர் டி. வேணுகோபால், மற்றும் கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் வி ஆர் நாராயண ரெட்டி உள்ளிட்ட அந்த அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாலையில் ஓசூர் ரயில்வே நிலையம் முன்பு துவங்கி நடைபெற்ற பேரணி, நகரின் முக்கியவீதிகள் வழியாக சென்று, காமராஜ் காலனி பகுதியில் நிறைவடைந்தது. மத்திய மாநில அரசுகளின் விவசாயிகளின் நலனுக்கு எதிரான போக்குகளை கண்டிக்கும் முழக்கங்களுடன் சென்ற பேரணியில் பசுமை வழி சாலை திட்டத்தினை அரசு கைவிட வேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டது. பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் எஸ் எஸ் ரங்கசாமி,விவசாயிகளை பாதிக்கும் வகையில் தற்போது இரண்டு அரசுகளும் மேற்கொள்ள இருக்கும் பசுமை 8 வழிசாலை திட்டத்தினால் எந்தவித நன்மையும் இல்லை. விவசாய நிலங்களை அழித்து புதிதாக இந்த திட்டத்தை நிறைவேற்றுவதை விட தற்போது இருக்கும் ஆறுவழிசாலைகளை விரிவாக்கம் செய்து தரமாக பரமரிப்பதோடு, அரசு ஏற்கனவே அறிவித்த நீர்வழி சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் விவசாயிகள் நல்ல பலனடைவார்கள். ஆகவே, மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டதாக கூறினார்.மேலும், விவசாயிகளின் கரும்பு கொள்முதல் நிலுவைத்தொகையினை உடனடியாக தரவேண்டும், என்று வலியுறுத்துவதுடன், விவசாயிகளின் நலனை பாதுகாக்க பழைய சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவரவேண்டும். அதேபோல புதிய சட்டங்களினால் விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து கர்நாடக மாநிலம் மேகதாது அணை விவகாரம் குறித்து பதிலளித்த அவர், நெடிய சட்டபோராட்டங்களுக்கு பின் காவேரி மேலாண்மை வாரியம் அமையபெற்ற பிறகு, சட்டம் அனுமத்தித்தால் அணை கட்டிக்கொள்ளட்டும் எனவும் தெரிவித்தார். இதில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுகணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com