Monday , 18 February 2019
Home » விளையாட்டுpage 4

விளையாட்டு

இந்தியா- ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – மோடி வாழ்த்து

1524112978-narendramodi-UK_0

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது.  இதையடுத்து அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More »

உலக கோப்பை கால்பந்து முடிவுகளை கணிக்கும் பூனை

ec6fd527e9124976a97bf5c090586483

உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் ... Read More »

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் !!

arjun tendulkar

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். நீண்ட நாட்களாக ஆடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர், தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் ... Read More »

நார்வே செஸ் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி

Viswanathan-Anands-failure

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்-ன் 8வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் எட்டாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்க வீரர் ஃபெபியானோ கருவானாவை எதிர்கொண்டார். கடுமையான சவாலாக இருந்த இந்தப்போட்டியின் 50-வது நகர்த்துதலின் போது ஆனந்த் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆனந்திற்க்கு எந்த புள்ளியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் இதுவரை 8 போட்டியில் ... Read More »

விராட்க்கு கோலி மெழுகு சிலை திறப்பு

Virat kohli

தில்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை புதன்கிழமை முதல் பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. லண்டனை அடிப்படையாகக் கொண்ட மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் ஒரு கிளை இந்தியத் தலைநகர் தில்லியிலும் செயல்பட்டு வருகிறது. மெழுகுச் சிலைகளுக்கு பெயர்பெற்ற இந்த அருங்காட்சியங்களில் உலக பிரபலங்கள் பலரின் தத்ரூப சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தில்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் லயோனல் மெஸ்ஸி, கபில் தேவ், உசைன் போல்ட் ஆகியோரின் வரிசையில் விராட் கோலியின் சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது. இந்த ... Read More »

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி தோல்வி

Kuala Lumpur: Indian cricketer Harman Kaur hits a boundary against Thailand during Asia Cup 2018, in Kuala Lumpur, Malaysia on Monday, June 04, 2018. (PTI Photo) (PTI6_4_2018_000025A)

7-வது மகளிர் ஆகிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியிடம் தோல்வியடைந்தது. Read More »

கென்யா அணியுடனான கால்பந்து போட்டி இந்திய அணி அபார வெற்றி

609391-563255-footballteam

கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா – கென்யா அணிகள் மோதின. இது இந்திய அணியின் கேப்டன் ... Read More »

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் மேலும் 4 புதிய அணிகள்

icc_logo

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ளன.தற்பேது மேலும் 4 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இணைக்கப்பட்டு உள்ளார். தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தது 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் இத்தனை போட்டிகளில் ஆடிய பிறகு தரவரிசையில் சேர்க்கப்படும்.இந்த புதிய அணிகள் சேர்க்கையினால் ... Read More »

இடைநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் ஆதரவுடன் அப்பீல் செய்வேன்’

201804061858430854_CWG-2018-Gold-Medallist-Sanjita-Chanu-Unhappy-About-Not_SECVPF

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.இந்த நிலையில் சஞ்சிதா சானுவிடம் போட்டி இல்லாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததாகவும், இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று ... Read More »

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்

578702-delhi-commonwealth-games

காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் தீபக் லேதர் வெண்கலப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் ஆடவருக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் லேதர் ஸ்னேட்ச் பிரிவில் 136 கிலோ எடையையும். கிளியர் அண்ட் ஜெர்க் (clear and jerk) பிரிவில் 159 கிலோ எடையையும் தூக்கினார். இரண்டையும் சேர்த்து 295 கிலோ எடையை தூக்கிய தீபக் லேதர் 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், காமன்வெல்த் தொடரில் இதுவரை இந்தியா ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com