Thursday , 21 March 2019
Home » விளையாட்டுpage 2

விளையாட்டு

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தங்கம்

Asia-Junior-Badminton-Championship

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கவுரவமிக்க இந்த ... Read More »

இங்கிலாந்து – இந்தியா ஒருநாள் கிரிக்கெட் இந்தியா வெற்றி

a5o225ublar_rohit-sharma-bcci_625x300

இங்கிலாந்து – இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி  பந்துவீச்சு தேர்வு செய்தார்.இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் தொடர்ந்து ஜோ ரூட்டையும், பேர்ஸ்டோவையும் வீழ்த்தினார். 5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்சும் ஜோஸ் பட்லரும் ஜோடி சேர்ந்தனர். ஜோஸ் பட்லர் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் ... Read More »

உலக கோப்பை கால்பந்து – இறுதிப்போட்டியில் குரோஷியா

England-croatia-FIFA01

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – குரோஷியா அணிகள் மோதின.ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை ... Read More »

விம்பிள்டன் – பெடரர் காலிறுதியில் தோல்வி

1c9dc1426a5d40e43fd8471623245fb7

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.இரண்டாவது காலிறுதியில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 8ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.பெடரர் முதல் செட்டை 5-2, இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டர்சன் 5-7, 4-6 என அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார்.வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் தீவிரமாக போராடினர். இறுதியில், ஆண்டர்சன் 11-13 என் அந்த செட்டை ... Read More »

விம்பிள்டன் டென்னிஸ் – கால்இறுதிக்குள் நுழைந்தார் பெடரர்

federer-cropped_s6tht3ojdd4n1o5qeqzwcsr0n

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-0, 7-5, 6-4 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் முன்னாரினோவை தோற்கடித்து 16-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 7-6 (7-5), 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் லாத்வியா வீரர் எர்னெஸ்ட் குல்பிஸ்டை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 6-4, 7-6 (10-8), 7-6 (7-4) என்ற ... Read More »

டி.என்.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை !!

Tn league

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ம் தேதி ஆரம்பிக்க உள்ள நிலையில் அதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி டி.என்.பி.எல். போட்டியின் மீடியா மேலாளர் டாக்டர் பாபா, கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், இந்த்ராஜித், ... Read More »

தொடர்ச்சியாக ஆறு டி 20 தொடர்களை கைப்பற்றி இந்தியா சாதனை!!

Cricket

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் கோலி தலைமையில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது.இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ... Read More »

இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

Ind vs Eng

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், கார்டியாவில் நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இருக்கிறது. முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் 2-வது ஆட்டத்தில் சொதப்பிவிட்டனர். தொடரை வெல்ல முக்கியமான போட்டி என்பதால் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும். இரு ... Read More »

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இந்தியா வெற்றி!!

Cricket

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.இந்நிலையில், மான்செஸ்டர் நகரில் இன்று முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 50 ஆக இருந்தபோது, ஜேசன் ராய் 20 பந்துகளில் ... Read More »

உலகக்கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்றில் ஆறு அணிகள் தகுதி!!

fifa world cup

21வது ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் பிரிவின் முடிவில் 16 அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இத்தொடரின் லீக் ஆட்டங்கள் 14-ம் தேதி தொடங்கி, நேற்று முடிவடைந்தது. லீக் போட்டிகளின் முடிவில், ‘ஏ’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘பி’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘டி’ பிரிவில் இருந்து குரேஷியா, ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com