Monday , 18 February 2019
Home » விளையாட்டுpage 10

விளையாட்டு

தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள் …

23507

ஒடிசாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் 4 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கேரள வீரர் முகமது ... Read More »

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவு என்ன ?

ca-corp-aus-world-cup-win

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய விவகாரத்துக்கு தீர்வு காணப்படாததால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்  புறக்கணிக்கப்பட்டுள்ளது . ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஊதியம் தொடர்பான வீரர்களின் கோரிக்கைகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளாததால் புதிய ஒப்பந்தத்தில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஊதியம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படும் வரை புதிய போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று வீரர்கள் அறிவித்துள்ளனர். இந்த அடிப்படையில் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் ... Read More »

சதத்துடன் வெற்றியை கொண்டாடும் கோஹ்லி ; வெற்றிக்கு இல்லை வேலி…

ind-vs-eng-1st-odi_2bc3e156-dbb5-11e6-a538-54bd197a5a1b

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் போட்டி, மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2 மற்றும் 3ஆவது போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றது. நார்த் சவுண்டில் ((North Sound)) நடைபெற்ற 4ஆவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வெற்றிபெற்றதால், நேற்று தொடங்கிய 5ஆவது போட்டியில் இந்தியா வெற்றிபெற்று ... Read More »

மோதி விளையாடு …இந்திய அணி முந்தய ஆட்டங்களை விட சிறப்பாக விளையாடுமா ?

virat-kohli-hardik-pandya_03301668-e864-11e6-a2d8-09470c086dd7

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று மாலை நடக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பையை அடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ளது. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆடாத ரஹானே, முகமது ‌ஷமி, தினேஷ் கார்த்திக், ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று ... Read More »

பாகிஸ்தான் வீரர் அசார் அலி இந்திய அணியின் வீரர்களுக்கு நன்றி தெரிவித்தது ஏன் ?

22327

சமீபத்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதிபோட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி, விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலியின் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைஅசார் அலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த இந்த ஜாம்பவான்களுக்கு நன்றி என்றும், இதனால் தனது குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஸின் மகனை ... Read More »

பாகிஸ்தானினை வீழ்த்த வங்கதேசத்துடனான ஆட்டம் ஒரு பயிற்சி …ரசிகர்கள் விமர்சனம் …

_00cd91f4-2665-11e7-a4a0-8e0501b9fa54

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரை இறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இன்று பிர்மிங்காம் நகரில் வங்கதேச அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அண்டை நாடான வங்கதேசத்தை விட இந்திய அணிக்கே சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் கிரிக்கெட்டில் எதுவும் நிச்சயமில்லை. வங்கதேச அணியை குறைத்து மதிப்பிடுவது மெத்தனப் போக்காகவே இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பின்தங்கிய நிலையில் இருந்து வங்கதேச அணி நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்த ... Read More »

உடலால் காயம்பட்ட வாஹப் ரியாஸ் !! மனதாலும் காயப்பட்டார் …

wahab-riaz-2103

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாஹாப் ரியாஸ், பிரபல வணிக இணையதளமான இ-பேயில் விற்பனைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், வஹாப் ரியாஸுக்கு விலையாக 610 ஆஸ்திரேலிய டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எதிர்பார்க்கப்படும் டெலிவரி டேட் என்ற இடத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 6 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டு விளையாடிவரும் நிலையில், அந்நாட்டு ரசிகர்களிடையே இந்த விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ... Read More »

அரையிறுதிக்கு தகுதியானது இங்கிலாந்து …ஆட்டத்தைவிட்டு வெளியேறியது நியூஸிலாந்து

britain-cricket-champions-trophy_2aed518c-4b30-11e7-942b-1b07039b2a8c

செவ்வாய்க்கிழமை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியானது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர் ஆகியோர் அரை சதம் கடந்து ரன் சேர்க்க உதவினர். 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 310 ரன்களை இங்கிலாந்து குவித்திருந்தது. இலக்கை விரட்டிய நியூஸிலாந்து ... Read More »

விராட் கோலி விருந்தில் மல்லையா ; லண்டனில் டான் டான் …

people-vijay-mallya_660_031015073405

இங்கிலாந்தில் விராட் கோலியின் அறக்கட்டளை நடத்திய இரவு விருந்து நிகழ்ச்சியில் விஜய் மல்லையா பங்கேற்றது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கி களில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவரை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா – ... Read More »

இந்தியா ஹெத்து …எதிர் டீமு டெத்து ; மண்ணை கவ்வியது பாகிஸ்தான் …

india-v-pakistan-icc-champions-trophy_4a9b039e-494b-11e7-9f7a-23d54b55bc46

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இடையில் மழை குறுக்கிட்டதால் 48 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஷிகர் தவான் 68 ரன்களிலும், ரோஹித் சர்மா 91 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி, யுவராஜ் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com