Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளை திருடிய நான்கு பேர் கைது!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளை திருடிய நான்கு பேர் கைது!!

விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளை திருடிய நான்கு பேர் கைது!!

vlcsnap-2018-06-29-12h32m50s031திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டி, ரெட்டியபட்டி மற்றும் அதனை ஒட்டிய கிராமப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகள் அதிகளவில் திருடப்பட்டு வருவதாக திருச்சுழி காவல் நிலையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
இந்த புகார்களின் அடிப்படையில் இன்று காலை திருச்சுழி காவல் துறையினர் திருச்சுழி காரியாபட்டி சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நான்கு ஆடுகளுடன் ஒரு டாட்டா இண்டிகா வாகனம் நிற்பதை கண்ட போலீசார் காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர் இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த கார் மற்றும் நான்கு ஆடுகளை பறிமுதல் செய்து திருச்சுழி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
பின்பு அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இவர்கள் நான்கு பேரும் காரியாபட்டியை சேர்ந்த மனோஜ்ஜெபச்டின், மணிராஜ், கண்ணன் மற்றும் அன்பரசன் என தெரிய வந்தது.இவர்கள் இன்று அதிகாலை திருச்சுழியை அடுத்த ஆலடிபட்டி கிராமத்தில் ஆடுகள் திருடியதாகவும் வரும் வழியில் கார் பழுதடைந்ததால் போலிசாரிடம் சிக்கியதாகவும் ஒப்ப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து மேலும் அவர்களிடம் நடந்த விசாரணையில் பல இடங்களில் நடந்த திருட்டுச் சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அடுத்து இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த திருச்சுழி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com