இலங்கை சென்றுள்ள விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி பற்றி பேசிய, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘அதிரடியுடன் கூடிய பேட்டிங் மற்றும் பந்து வீச்சு, பீல்டிங்கில் இந்திய அணி வலுவாக இருக்கிறது. ஆனால் இலங்கை அணியில் கவலைக்குரிய அம்சங்கள் அதிகம் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. விராத் கோலியின் கேப்டன்ஷிப்பை சோதித்து பார்க்கும் அளவுக்கு போட்டிகள் இன்னும் வரவில்லை. இன்றையச் சூழலில், இலங்கை பலம் வாய்ந்த டெஸ்ட் அணியாக இல்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சாதிப்பதுதான் கடினம். அத்தகைய டெஸ்ட் தொடர்கள் தான் அவரது கேப்டன்ஷிப்பில் அணி எப்படி செயல்படுகிறது என்பதை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கும்’ என்றார்.