Sunday , 16 December 2018
Home » முக்கிய செய்திகள்: » விம்பிள்டன் டென்னிஸ் – கால்இறுதிக்குள் நுழைந்தார் பெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் – கால்இறுதிக்குள் நுழைந்தார் பெடரர்

federer-cropped_s6tht3ojdd4n1o5qeqzwcsr0nஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-0, 7-5, 6-4 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் முன்னாரினோவை தோற்கடித்து 16-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 7-6 (7-5), 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் லாத்வியா வீரர் எர்னெஸ்ட் குல்பிஸ்டை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 6-4, 7-6 (10-8), 7-6 (7-4) என்ற நேர்செட்டில் கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ்சை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கனடா வீரர் மிலோஸ் ரானிச் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ரஷியாவை சேர்ந்த தகுதி சுற்று வீராங்கனை எவ்ஜெனியா ரோடினாவை எளிதில் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com