Sunday , 16 December 2018
Home » உலகம் » விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பெண் மந்திரி கைது

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பெண் மந்திரி கைது

77இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான மந்திரிசபையில் குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர், விஜயகலா மகேஸ்வரன்(45). தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.தனது உரையின் இடையே, தமிழர்கள் அதிகமாக வாழும்  நாட்டின் வடக்கு மாகாணத்தில்  சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக சுட்டிக்காட்டிய விஜயகலா மகேஸ்வரன், முன்னர் அரசு நிர்வாகத்துக்கு இணையாக விடுதலைப் புலிகள் இப்பகுதியை ஆட்சி செய்தபோது மக்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாக குறிப்பிட்டார்.அவரது இந்த கருத்து இலங்கையை சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கடந்த ஜூலை மாதம் இந்த பிரச்சனையை மையமாக வைத்து ராஜபக்சே உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். விஜயகலா மகேஸ்வரனை மந்திரி பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பேசிய அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து விஜயகலா மகேஸ்வரன் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கொழும்பு நகரில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு காவல் துறை அலுவலகத்தில்  விஜயகலா ஆஜரானார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com