Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விடிய விடிய சோதனை… 50 கிலோ தங்கம் பறிமுதல் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » தமிழ்நாடு » விடிய விடிய சோதனை… 50 கிலோ தங்கம் பறிமுதல்

விடிய விடிய சோதனை… 50 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் விடிய விடிய சோதனை மேற்கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சுமார் 100 பேரிடம் இருந்து 50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்றிரவு அங்கு சென்ற 22 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்களது உடைமைகளையும் தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது, உடைமைகள், உள்ளாடைகள், மலக்குடல் ஆகியவற்றில் மறைத்து சுமார் 100 பேர் தங்கம் கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களிடம் இருந்து இதுவரை 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர், மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததால் அவர்கள் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு எனிமா கொடுக்கப்பட்டது. இதை அடுத்து அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட பலர், கடத்தல் தொழிலில் ஈடுபடும் குருவிகள் என்றும் சிலர் குருவிகளுக்கு ஏஜெண்டுகளாகச் செயல்படும் கொக்குகள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் இவ்வளவு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை வளையத்தில் உள்ளவர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

செல்போன்களில் உள்ள அழைப்பு விவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. எதற்காக தங்கம் கடத்தினார்கள்? கடத்தல் தங்கம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது? கடத்தலுக்கு மூளையாகச் செயல்படும் கும்பல்? ஆகியவை தொடர்பாக போலீசார் உதவியுடன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com