Friday , 16 November 2018
Home » உலகம் » வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை

வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை

whats upவாட்ஸ்அப்-இல் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வெளியிடப்படும் முன், தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்பத்துகின்றனர்.வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய மொழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். இத்துடன் பீட்டா பதிப்பில் பணப்பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்ட விவரங்களும் அடங்கும்.வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பரிமாற்ற வசதியை தனது செயலியில் வழங்க இருக்கிறது.வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்ற வசதி வழங்குவதற்கான சரியான தேதி இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், கொள்கை மற்றும் விதிமுறை மேம்படுத்தப்பட்டு இருப்பது, வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com