Monday , 20 November 2017
Home » மாவட்டம் » புதுக்கோட்டை » வரி ஏய்ப்பு செய்பவர்கள் தான் ஜி.எஸ்.டிக்கு எதிராக பேசுகிறார்கள் ; எச்.ராஜா சாடல் …

வரி ஏய்ப்பு செய்பவர்கள் தான் ஜி.எஸ்.டிக்கு எதிராக பேசுகிறார்கள் ; எச்.ராஜா சாடல் …

CB21H.RAJA_GKEB+CB21H.RAJA.jpgகருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான் ஜி.எஸ்.டியை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருவருதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாஜகவின் 3 ஆண்டு சாதனை விளக்க மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு காவல்துறையினர் அனுமதி மருத்ததால், பாஜகவினர் தேசியசெயலாளர் எச்.ராஜா தலைமையில் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துணை கண்காணிப்பாளர் பாஜகவினரிடம் பேச்சிவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார். கருப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்பவர்கள் தான் ஜி.எஸ்.டிக்கு எதிராக பேசி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com