Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வனப்பொருள் சேகரிக்க தடை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியின மக்கள் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » ஈரோடு » வனப்பொருள் சேகரிக்க தடை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியின மக்கள்

வனப்பொருள் சேகரிக்க தடை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியின மக்கள்

vlcsnap-2018-07-21-11h27m15s406சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கேர்மாளம் வனச்சரகம் மலைப்பகுதியை உள்ளடக்கியதாகும். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் கெத்தேசால், கேர்மாளம், ஜே.ஆர்.எஸ் புரம், செலுமிதொட்டி, கானக்கரை, செலுமிதொட்டி, காடட்டி, கோட்டமாளம், வைத்தியநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் என்பது விவசாயம் மற்றும் வனப்பொருள் சேகரிப்பு முக்கிய தொழிலாகும். வனத்தில் உள்ள தேன், நெல்லிக்காய், கடுக்காய், பூச்சக்காய், சீமார்புல், வேப்பங்கொட்டை, சுண்டைக்காய் உள்ளிட்ட வனப்பொருட்களை சேகரித்து வருமானம் ஈட்டுவதோடு அதன் முலம் கிடைக்கும் வருவாயில் அவர்களது மானாவாரி நிலங்களில் ராகி, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஓராண்டாக கேர்மாளம் வனச்சரகத்தில் பணிபுரிந்து வரும் வனச்சரகர் முரளி என்பவர் பழங்குடியின மக்களை வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என தடுத்ததால் வனப்பொருள் சேகரிப்பு, கால்நடைகள் மேய்த்தல் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் தடைபட்டதுள்ளதோடு அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மீறி வனத்திற்குள் செல்வோரை மிரட்டுவதோடு அபராதமும் விதித்து வசூலித்துள்ளதாக பழங்குடியின மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் சாலையில் கால்நடைகளை ஓட்டிச்செல்லும்போது வழி தவறி வனப்பகுதிக்குள் கால்நடைகள் சென்றால் அதற்கும் அபராதம் விதித்த கொடுமையும் நடந்துள்ளது. வனப்பொருள் சேகரம் தடைபட்டதால் பழங்குடியினரின் விவசாய நிலங்கள் தற்போது பெய்த மழையில் பார்த்தீனிய செடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது. கடந்த மாதம் கெத்தேசால் கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் ஒருவர் தேன் சேகரிக்க சென்றபோது வனத்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதேபோல் கேர்மாளம் ஜே.ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்த இருபெண்கள் வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் காலைக்கடன் கழிக்க சென்றபோது அங்கு செல்லக்கூடாது எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. சமைப்பதற்கு வனச்சாலையோரம் உள்ள சுள்ளி பொறுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனகிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் காலம்காலமாக வனப்பொருள் சேகரித்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கேர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட பழங்குடியின மக்கள் தங்களது இழந்து தவிப்பதோடு வன அதிகாரிகளின் மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளதால் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பழங்குடியினர் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். 2006 வனஉரிமைச்சட்டப்படி வனப்பொருட்கள் சேகரிக்க அனுமதி உள்ளதோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மற்ற வனச்சரகங்களில் வசிக்கும் வனகிராமமக்கள் வனப்பொருள் சேகரம் செய்ய எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில் கேர்மாளம் வனச்சரகத்தில் மட்டும் வனஅதிகாரிகள் பழங்குடியினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடந்துகொள்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com