வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இதன் மூலம் அவர்கள் ஏழைகளுக்கு மறைமுகமாக உதவ முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இதுவரை சமையல் எரிவாயு மானியத்தை கைவிட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 100 கோடி ரூபாய் மீதமாகியுள்ளதாகவும், தெரிவித்த நரேந்திரமோடி தற்போது 27 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல், இந்தியாவின் எரிசக்தி தேவையில் 77 சதவிகிதத்தை பெற வெளிநாடுகளையே நம்பியுள்ளதாகவும் இந்த அளவை இன்னும் 7 ஆண்டுகளில் 10 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.