Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வங்கக் கடலில் உருவாகும் புயல் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » தமிழ்நாடு » வங்கக் கடலில் உருவாகும் புயல்

வங்கக் கடலில் உருவாகும் புயல்

வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது தொடர்ந்து தீவிர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று புயலாகவும் வலுப்பெறக்கூடும். தற்போதைய நிலவரப்படி இந்த புயல் சின்னம் வட மேற்கு திசையில் வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதியை நோக்கி நகரக் கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாவதால், மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்க வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீனவர்களுக்கு உரிய முறையில் வானிலை தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கு முன்னரே மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனே கரை திரும்புமாறு தகவல் அனுப்ப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மீன்துறை இயக்குநர் அலுவலகத்தில் மைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, அனைத்து கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு புயல் குறித்த தகவல் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com