Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு » ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்

ramரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசி கடத்தப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசியில் 12 சதவீதத்துக்கும் கூடுதலான அரிசி கடத்தப்படுவதை சாதாரண விஷயமாக ஒதுக்கிவிட முடியாது. அரிசி கடத்தல் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் துல்லியமானவை அல்ல என்றும், இதனால் இதை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இது அரிசிக் கடத்தல் ஊழலை அடியோடு மூடி மறைக்கும் முயற்சி ஆகும். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படவில்லை என்று தமிழக அரசு கருதுமானால், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com