Monday , 23 October 2017
Home » தமிழ்நாடு » ரூ 8-கோடி மதிப்பீட்டில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான விடுதிகள் – முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

ரூ 8-கோடி மதிப்பீட்டில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான விடுதிகள் – முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

51595-ynzkfmqjpp-1487244685ரூபாய் 8-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான விடுதிகள், 3-கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களையும் முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவர்களுக்காக 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 972 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில், 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள 2 விடுதிக் கட்டடங்களை முதல்-அமைச்சர் பழனிசாமி காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை, எழும்பூரில் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கான அலுவலகக் கட்டடம்;, தேனி மாவட்டம், போடி நாயக்கனூரில் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மாணவியருக்கான விடுதிக் கட்டடம் என மொத்தம் 8 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் வைத்தார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், செந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டம்- காளையார்கோவில் என மொத்தம் 3 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com